Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

Oredesam by Oredesam
August 6, 2021
in இந்தியா, செய்திகள்
0
இ-ருபி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?
FacebookTwitterWhatsappTelegram

இ-ருபி என்பது அடிப்படையில் ஒரு டிஜிட்டல் வவுச்சர் ஆகும். அதனை பயனாளி அவரது தொலைபேசியில் குறுந்தகவல் வடிவிலோ அல்லது கியூஆர் கோட் வடிவிலோ பெறுவார். இது முன்கூட்டியே பணம் செலுத்திய வவுச்சர் ஆகும். அதனை ஏற்றுக்கொள்ளும் எந்த மையத்திலும் அதைக்காட்டி பயனாளி பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக, ஒரு ஊழியருக்கு குறிப்பிட்ட மருத்துவமனையில் குறிப்பிட்ட சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்று அரசு விரும்பினால், அது இ-ருபி வவுச்சரை ஒரு குறிப்பிட்ட தொகையை பங்குதார வங்கி மூலமாக வழங்கலாம். ஊழியருக்கு ஒரு குறுந்தகவலோ அல்லது அவரது போனில் கியூஆர் கோடோ அனுப்பப்படும். அந்த ஊழியர் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்று போனில் பெறப்பட்ட இ-ருபி வவுச்சர் மூலமாக பணம் செலுத்தி சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

இவ்வாறு இ-ருபி ஒரே தடவையிலான, நேரடி தொடர்பில்லாத, ரொக்கமில்லா வவுச்சர் அடிப்படையிலான பரிவர்த்தனை முறையாகத் திகழ்கிறது. இது எந்தவித அட்டை, டிஜிட்டல் பரிவர்த்தனை செயலி அல்லது இணையதள வங்கி அணுக்கம் ஆகியவற்றின் உதவியுமின்றி பயனாளிகள் பணம் பெறுவதற்கு உதவுகிறது.

ரிசர்வ் வங்கி சிந்தித்து வருகிற டிஜிட்டல் கரன்சி முறையாக இ-ருபி-யை எண்ணி குழப்பமடையக்கூடாது. இ-ருபி என்பது ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டதுடன், குறிப்பிட்ட டிஜிட்டல் வவுச்சர் நோக்கமுடையது.

நுகர்வோருக்கு இ-ருபி எவ்வாறு பயனளிக்கிறது?

மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடுகையில், இ-ருபியைப் பொறுத்தவரை பயனாளிக்கு வங்கிக் கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது மிகப் பெரிய சிறப்பு அம்சமாகும். இது எளிமையான, நேரடி தொடர்பில்லாத பணம் பெறுவதை உறுதி செய்கிறது. இதற்கு தனிநபர் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.

இதில் மற்றொரு பயனும் உள்ளது. சாதாரண போன்கள் மூலம் கூட இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம். அதனால், ஸ்மார்ட் போன் இல்லாதவர்களும், இணையதள வசதி இல்லாத இடங்களில் உள்ளவர்களும் கூட இதனைப் பயன்படுத்தலாம்.

கொடுப்பவர்களுக்கு இ-ருபியின் பயன்கள் எவை?

இ-ருபி நேரடி பணப்பரிவர்த்தனை முறையை வலுப்படுத்துவதிலும், அதில் மேலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் வகையிலும் பெரும் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், வவுச்சர்களை நேரடியாக அளிக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன், செலவைக் குறைக்கவும் இது வழிவகுக்கும்.

சேவை வழங்குவோருக்கு கிடைக்கும் பயன்கள் என்ன?

முன்கூட்டியே பணம் செலுத்தும் வவுச்சராக இருப்பதால், இ-ருபி சேவை வழங்குவோருக்கு உடனடியாக தொகை கிடைப்பதை உறுதி செய்கிறது.

இ-ருபியை உருவாக்கியது யார்?

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ), ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க வவுச்சர் அடிப்படையிலான இ-ருபி பரிவர்த்தனை முறையை உருவாக்கியுள்ளது.

நிதித்துறை சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய சுகாதார ஆணையம் ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இ-ருபியை எந்த வங்கிகள் அளிக்கின்றன?

இ-ருபி பரிவர்த்தனைகளுக்காக என்பிசிஐ 11 வங்கிகளுடன் கூட்டு வைத்துள்ளது.  அவை ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தஸ்இந்த் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் ஆகும்.

பாரத் பே, பீம் பரோடா மெர்ச்சன்ட் பே, பைன் லேப்ஸ், பிஎன்பி மெர்ச்சன்ட் பே, யோனோ எஸ்பிஐ மெர்ச்சன்ட் பே ஆகியவை இதற்கான செயலிகள் ஆகும்.

இ-ருபி முன்முயற்சியில் மேலும் அதிக வங்கிகள் மற்றும் செயலிகள் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இ-ருபியை எங்கு பயன்படுத்தலாம்?

தொடக்கமாக என்பிசிஐ 1,600-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை தொடர்பில் வைத்துள்ளது. இங்கு இ-ருபி முறையைப் பயன்படுத்தலாம்.

வரும் நாட்களில், தனியார் துறை ஊழியர்களுக்கு பயன்களை வழங்குவதற்கும், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தொழில் பரிவர்த்தனைகளுக்கு பின்பற்றவும் ஏதுவாக  இ-ருபி பயன்படுத்தப்படும், தளம் விரிவாக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ரஜினிசாருக்கு  அப்படி என்ன உடல்நலக் கோளாறு’ நடிகை கஸ்தூரி! ட்விட்டர் போர்!

ரஜினிசாருக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு’ நடிகை கஸ்தூரி! ட்விட்டர் போர்!

July 1, 2021
மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் பாஜாகவுடன் கை கோர்க்கிறார் ராஜ்தாக்கரே.

September 1, 2021
thiruvannamlai

திருவண்ணாமலை மலையே சிவன் தான்! தமிழக அரசுக்கு, குட்டு வைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

July 16, 2024
MKS

அடடே முதல்வர் ஸ்டாலின் வந்ததால் இதெல்லாம் நடந்து விட்டதா? பூரிப்பில் தமிழக மக்கள்..

January 4, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x