முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.அடுத்த வருடம் நடைபெற இருக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக போட்டியிட எடியூரப்பாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவருகிறது. மேலும் கர்நாடகாவின் புதிய முதல்வராக பா.ஜ.க தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் கிளம்பியுள்ளது.
கர்நாடகாவில் 4 முறை முதல்வராக இருந்த எடியூரப்பா நேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஆளுநர் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்தார். கர்நாடகவில் கடந்த 2019 ஆம் ஆண்டுநடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜூலை மாதம் 26 ஆம் தேதி எடியூரப்பா 4வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார். பாஜகவில் ஒரு வழக்கம் உண்டு 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜ.கவில் ஓய்வு அளிக்கப்படுவது.
ஆனால் கர்நாடக முதல்வராக 4 வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்கும் போது அவருக்கு வயது 76 இருந்தாலும் பாஜக அவருக்கு விலக்கு அளித்தது. அவருக்கு முதல்வர் பதவியை பா.ஜ.க மேலிடம் வழங்கியது. ‘அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும்’ என நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை ஏற்ற எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்று இன்றுடன் (ஜூலை 26) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.இதன் காரணமாக எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா அவர்கள் நான்கு முறை என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி.தொடர்ந்து அரசியலில் நீடிப்பேன். மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்து, அடுத்த முறையும் பா.ஜ.க வை ஆட்சியில் அமர வைப்பேன். ஆளுநர் பதவி வேண்டாம் என்று கூறியுள்ளேன்.அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைக்கவில்லை. என்னை கேட்டாலும் பரிந்துரைக்க மாட்டேன். என கண்ணீர் மல்க பேசினார்.
எடியூரப்பாவுக்கு அடுத்து முதல்வர் யார் இந்தியா முழுவதும் கேள்வியை எழுப்பியுள்ளது.
அனைவரும் பிரகலாத் ஜோஷி, சி.டி.ரவி. என இவ்வாறு எதிர்பார்க்க டெல்லி வட்டாரங்களோ வேறொரு முடிவை எடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது டெல்லி ஹாட் டாபிக் கர்நாடக முதல்வராக பி.எல்.சந்தோஷ் என்ற பேச்சு அடிபடுகிறது. முதல்வர் ரேஸில் முன்னணியில் இருப்பவர்கள்என இருவர் இருந்து வரும் நிலையில் அந்த ரேஸில் முன்னணியில் இருப்பவர் பிரகலாத் ஜோஷி இரண்டாவது இடத்தில் இருப்பவர் சி.டி.ரவி. பிரகலாத் ஜோஷி முன்னாள் கர்நாடக மாநில பா.ஜ.க தலைவராக இருந்தவர் இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கிறார்.ஆனால் தற்போது கர்நாடக முதல்வர் ரேஸில் பி.எல் சந்தோஷ் அவர்களும் இணைந்துள்ளார்.
பிரகலாத் ஜோஷி பாராளுமன்ற விவகாரம் மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை அமைச்சராக 2019 ல் இருந்து பணியாற்றி வருகிறார் மோடியின் நம்பிக்கையை பெற்ற அமைச்சர்களில் பிரகலாத் ஜோஷியும் ஒருவர் தார்வாட் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து 2004 ல் இருந்து 2019 வரை 4 முறை வெற்றி பெற்று இருக்கிறார். லிங்காயத்துக்கள் அதிகம் உள்ள வடக்கு கர்நாடகாவில் பிரகலாத் ஜோஷி தொடர்ந்து மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று வருகிறார்.
பிராமணரான பிரகலாத் ஜோஷிக்கு போட்டியாக அடுத்த முதல்வர் ரேசில் வந்து கொண்டு இருப்பவர் சி.டி ரவி.இப்பொழுது தமிழக பிஜேபிக்கு பொறுப்பாளராக இருக்கிறார் தமிழக பிஜேபி தலைவராக இருக்கும் அண்ணாமலையை அரசியலுக்கு கொண்டு வந்தவர் இவர் சி.டி ரவி.ஒக்கலிகர் இனத்தை சார்ந்தவர் தெற்கு கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் மாவடத்தில் பிஜேபியை வளர்த்தவர்.சிக் மகளூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2004 ல் இருந்து 2018 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ச்சியாக 4 முறை வெற்றி பெற்றுள்ளார். இருக்கிறார்.இப்பொழுது பிஜேபியின் தேசிய பொது செயலாளரா இருக்கும் சி.டி ரவி எடியூரப்பாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் தான். இவர் தேசிய அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் அவர்களின் தீவிர அபிமானி.
பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளரானா பி.எல்.சந்தோஷ் 13வருடங்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பணியாற்றியவர். பி.எல். சந்தோஷ் கர்நாடகவில் எட்டு ஆண்டுகள் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளராக இருந்தார். அவர் 2014 ஆம் ஆண்டு தென் மாநிலங்களுக்குப் பொறுப்பான
தேசிய அலுவலக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பின் நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று தந்தத்தில் மிகப்பெரும் பங்காற்றினார். கர்நாடக மூலை முடுக்கு அனைத்து பகுதியும் இவருக்கு அத்துப்படி. அரசியல் வியூகங்கள் அமைப்பதில் கெட்டிக்காரர்.பொறுமையாக செயல்பட கூடிய பி.எல். சந்தோஷ் பிராமணர் தற்போது கர்நாடக முதல்வர் ரேஸில் பிரகலாத் ஜோஷிக்கும் பி.எல். சந்தோஷ் அவர்களுக்கும் நேரடி போட்டி எழுந்துள்ளது. எனினும், புதிய முதல்வரை டில்லியில் பா.ஜ.க மேலிடக் குழு முடிவு செய்யும். வரும் வியாழக்கிழமை, புதிய முதல்வர் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















