கடந்த 28 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கல்விக் கொள்கையினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் எப்போதும் போல் அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் திராவிட அரசியல் கட்சியினர். இந்த நிலையில் தான் கனிமொழி ஒரு ட்வீட் பதிவு செய்தார் அந்த பதிவில் எப்போதும் போல் அரசியல் தான் இந்தி எதிர்ப்பு தான் அவர் பதிந்த ட்வீட்
“இந்தியராக இருப்பதெனில் இந்தி பேசுவதற்கு சமம் என எப்போதிருந்து உணரப்படுகிறது?” என கேள்வியெழுப்பியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தி திணிப்பு என்கிற ஹேஷ்டேகையும் பயன்படுத்தியுள்ளார்.
அதாவது கனிமொழி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி கனிமொழியிடம் இந்தியில் ஏதோ கேட்டுள்ளார் எனவும் . அதற்கு கனிமொழி தனக்கு இந்தி தெரியாது என்றும், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுள்ளார். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியர்தானே என கேள்வியெழுப்பியுள்ளார்.என்று கூறியிருக்கிறார் கனிமொழி.
உடனே கூட்டணி காங்கிரஸ் எம்.பி மணிகம் தாகூர் கொதித்தெழுந்து கனிமொழியின் டிவிட்டிற்கு, ,“இந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது” என கருத்து தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம், “வெளிப்படையான அபத்தம் இது.” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ட்வீட் பார்த்த சிஐஎஸ்எஃப் கனிமொழி எம்.பி ட்விட்டருக்கு பதில் அளித்தது யார் அந்த அதிகாரி எந்த விமானநிலையம் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தது. இதை எதிர்பார்க்காத கனிமொழி நன்றி நான் சொல்கிறேன் என மட்டும் தெரிவித்துள்ளார். ஆனால் அது யார் எந்த விமான நிலையம் என்று குறிப்பிடவில்லை.
மேலும் பாரதிய ஜனதா அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது என நக்கலாக கனிமொழிக்கு பதில் அளித்துள்ளார்!
இன்னும் ஹிந்தியை வைத்து தமிழகத்தில் வெற்றி பெற்று விடலாம் என கனிமொழி திராவிட காட்சிகள் நினைத்து இது போல் நாடகமாடுகிறார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள்!