தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,
நகர்புற உள்ளாட்சி தேர்தல் 21.11.2021 முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் மாநில தலைவர் அண்ணாமலை Ex. IPS அறிவிப்பு
விரைவில் நடைபெற இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகளிடமிருந்து நவம்பர் 21ந்தேதி முதல் விருப்ப மனுக்கள்
பெறப்பட உள்ளது. விருப்ப மனு கட்டணம் மாநகராட்சி வார்டுகளுக்கு ரூபாய் 3000,நகராட்சி வார்டுகளுக்கு ரூபாய் 2000, பேரூராட்சி வார்டுகளுக்கு ரூபாய் 1000 என விருப்பமனு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்களுக்கும், பட்டியல் இன சமுதாயத்திற்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளுக்கும் 50% மட்டும் மேற்கண்ட கட்டணத்தில் வசூலிக்கப்படும். வருகின்ற 21ந்தேதி காலை 10.30 மணி அளவில் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும், பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் விருப்ப மனுக்கள் நானே பெற்றுக்கொள்ள இருக்கிறேன்.
மற்ற மாநகராட்சிகளில் மாநில நிர்வாகிகள், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற
உறுப்பினர்கள் நேரில் சென்று விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ள இருக்கிறார்கள்.
அதன் விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. 21ந்தேதி தொடங்கி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் 26ந்தேதி வரை விருப்ப மனுக்கள்
பெறப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார்.