இந்தியாவில் பல பேர் பல நாட்டிற்கு வேவு பார்த்து வருகின்றார்கள். பாலஸ்தீன மக்கள் போராட்டம் என்றால் இங்கு போஸ்டர் ஒட்டுவார்கள்,வங்கதேச மக்களுக்காக இங்கு போராடுவார்கள், வெளிநாட்டில் இருந்து வரும் சட்ட விரோத மக்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். ஆனால் இந்தியாவுக்கு பிரச்னை என்றால் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான், உளவு அமைப்பிற்காக இந்தியாவை வேவு பார்த்த தூதரக ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.டில்லி பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள், அபீத் ஹூசைன், மற்றும் தாஹிர்கான். இவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டில்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ். அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை பாகிஸ்தான் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















