கெஜ்ரிவாலுக்கு 6-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..கடைசி வாய்ப்பு… இல்லை கைது தான்..

Arvind Kejriwal

Arvind Kejriwal

அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6- வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், சம்பந்தப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு . அமலக்கத்துறை 5 முறை அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து விட்டார்.இதனை தொடர்ந்து 6-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை. ஏற்கனேவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மீதான பிடி இறுக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்நிலையில் தான் டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன.

சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, விசாரணையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் அமலாக்கத்துறையும் சிபிஐ யையும் இந்த வழக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் அதிரடி சோதனைகள் நடந்தது.

அதிரடி சோதனைகள் கிடைக்கபெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி விஜய் நாயர், மற்றும் 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலைகள் மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய் நாயர் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அதோடு டெல்லி துணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங் எம்பியும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து தான் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சிபிஐ கேட்ட கேள்விகளுக்கு கெஜ்ரிவால் பதிலளித்தார். அதன்பிறகு அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். இதுவரை 5 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனில், பிப்ரவரி 19ம் தேதி ஆஜர் ஆகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.ஒருபக்கம் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 17 ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமலாக்கத்துறை தனியே விசாரணைக்கு வரும்படி அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

நில சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் இப்படித்தான் அமலாக்கத்துறை சம்மனை புறக்கணித்து தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார். அதன்பிறகு சமீபத்தில் அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தி அதிரடியாக கைது செய்தது.

அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை புறக்கணித்து வரும் நிலையில் விரைவில் அவரும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version