நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு தளர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தொடரும், இந்த 3-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பொதுமுடக்கம் 3-ம் கட்ட தளர்வுகள்
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆக.31 வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் தொடரும். மாநிலங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் தனிநபர் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு “இ பாஸ்” அனுமதி தேவையில்லை.
பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள், அரங்குகள் செயல்பட விதித்த தடை தொடர்கிறது. யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் அனுமதி.
இந்தியா முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்ட் 31 வரை இயங்காது. சமூக இடைவெளியுடன் சுதந்திர தின கொண்டாடப்படும்.
திரையரங்குகள், மெட்ரோ ரயில் சேவை, நீச்சல் குளம், பார்களுக்கு அனுமதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
மத நிகழ்வுகள், அரசியல் கூட்டம் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை தொடரும். பொது போக்குவரத்திற்கு தளர்வு அல்லது முடக்கம் குறித்த முடிவுகள் எடுக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளுடன் நடவடிக்கை. குறைந்த அளவிலான எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















