Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

அபுதாபியில் அத்தியாயம் உருவானது… முதல் பிரமாண்ட இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி…

Oredesam by Oredesam
February 14, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
UAE Temple Inauguration

UAE Temple Inauguration

FacebookTwitterWhatsappTelegram

இரு நாள் பயணமாக அமீரக நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலான சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலை இன்று திறந்து வைத்தார். பின் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அபுதாபியில் இந்து கோயில் திறந்து வைக்கப்பட்டது பொன்னாக அத்தியாயம் என கோயிலை திறந்து வைத்த பின் பிரதமர் மோடி கூறினார்.

சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் அயோத்தி ராமர் கோவில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் உள்ள சிற்ப நுணுக்கங்கள் பிரமிக்க வைத்துள்ளது. இந்தசுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் ஆன்மிகம், கலாச்சாரம், கட்டிடக்கலை, கலாச்சார ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையாக கட்டப்பட்டுள்ளது. அபுதாபியின் முதல் இந்துக் கோவில் என்ற பெருமையை தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள இந்துக்களின் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டுள்ள முதல் கற்கோவில் என்ற பெருமையையும் இந்த கோவில் பெற்றுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கோவிலின் சிறப்புகள்
இந்த கோவில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் 27 ஏக்கர் இடத்தில் அமைந்துள்ளது .இந்த மந்திர் 32.92 மீட்டர் (108 அடி), 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் உள்ளது. இந்த பிரம்மாண்ட இந்துக்கோவில் கட்டுவதற்காக அபுதாபி மன்னர் ஷேக் முகம்மது பின் சையத் அலி நஹ்யன், 13.5 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதில் உள்ள சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

ராஜஸ்தானில் இருந்து மணல் கற்கள் கொண்டு செல்லப்பட்டு, இத்தாலி வெள்ளை மார்பிள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு, அபுதாபி கொண்டு செல்லப்பட்டு இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளன. அதைக் குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்கள் இந்த கோவிலில் உள்ளன. இது தவிர குவி மாடங்களும் எண்ணற்ற தூண்களும் உள்ளன. தூண்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, சிவபுராணம் ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் அடித்தளத்தில் 300 சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளது. நில அதிர்வு மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் போன்றவை குறித்து அறியவும் அதிக சென்சார்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவிலின் கட்டுமான செலவு 400 மில்லியன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 900 கோடிக்கு மேல் ஆகும்.

அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்தியர்கள் வாழ்வதாக சர்வே சொல்கிறது. அந்த நிலையில் அவர்களுக்கு இந்தக் கோயில் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்தக் கோயில் குறித்து கருத்துத் தெரிவித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதர் அப்துல்நாசிர் அல்ஷாலி, ‘இந்த நிகழ்வை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது’ என்கிறார்.

இந்தக் கோயிலில் கட்டுமானம் முழுக்க முழுக்கப் பண்டைய கட்டுமானக் கலையை அடிப்படையாகக் கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதில் எங்கும், ‘எஃகு’ (steel) பயன்படுத்தப்பட வில்லை என்கிறார் பாப்ஸ் அமைப்பைச் சேர்ந்த பிரஹாம் பிஹாரி தாஸ்.

பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

பிற அரபு நாடுகளில் பல இந்துக்கோயில்கள் உள்ளன என்றாலும் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள கோயில் அமீரகத்தில் முதல் கோயில் என்பது குறிப்பிடத்தக்கதுஅமீரகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு மைல்கல்லாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இந்துக்களுக்கென்று ஒரு பிரத்யேக இந்து கோவில் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது .

பல வருடங்கள் கடினமான உழைப்புக்கு பின் இந்து கோயில் திறந்து வைக்கப்பட்டுள்ளது பொன்னான அத்தியாயம். இங்கு புர்ஜ் கலிபா, பியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் பிற ஹைடெக் கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது திறக்கப்பட்டுள்ள மற்றொரு கலாச்சார அத்தியாயத்தில் பாப்ஸ் இந்து கோயில் சேர்ந்துள்ளது. வரும் காலங்களில் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள், மற்றும் லட்சக்கணக்கானோர் சார்பில் யு.ஏ.இ., அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காடுவெட்டி குரு மகன் எச்சரிக்கை.. 5 காவலர்கள் சூர்யாவை காப்பாற்றி விடுவார்களா… இது தான் கடைசி எச்சரிக்கை!

காடுவெட்டி குரு மகன் எச்சரிக்கை.. 5 காவலர்கள் சூர்யாவை காப்பாற்றி விடுவார்களா… இது தான் கடைசி எச்சரிக்கை!

November 20, 2021
NAINAR

மணல் கடத்தலைத் தடுத்தால் மரணத்தைப் பரிசளிக்கும் திமுக அரசு-நயினார்நாகேந்திரன் ஆவேசம் !

August 21, 2025
காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபில் மற்றொரு இந்து சாது.

காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபில் மற்றொரு இந்து சாது.

April 25, 2020
ரபேல் ஊழல் பிரச்சனை மீண்டும் எழ இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்!  உண்மையை ஆதாரங்களுடன் உடைத்த கே.டி  ராகவன்

ரபேல் ஊழல் பிரச்சனை மீண்டும் எழ இடதுசாரி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்! உண்மையை ஆதாரங்களுடன் உடைத்த கே.டி ராகவன்

July 22, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x