சமூகவலைத்தளங்களில் முக்கிய செயலிகளான Facebook மற்றும் WhatsApp-யை பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் கூறியிருந்த நிலையில், ‘தோல்வியுற்றவர்களின் கூச்சல் அது’ என மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி..!
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இந்தியாவில் Facebook மற்றும் WhatsApp உள்ளிட்ட சமூக வலைதள செயலிகள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. இவற்றின் மூலம் வாக்காளர்களை கவருவதற்காக வெறுக்கத்தக, போலி செய்திகள் பகிரப்படுகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர், அமெரிக்காவில் வெளியாகும் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் வெளியான கட்டுரையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தனது கட்சியில் உள்ளவர்களிடமே செல்வாக்கை பெற முடியாத தலைவர், உலகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி வருகிறார்.
தேர்தலுக்கு முன்பே, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா, பேஸ்புக்கை பயன்படுத்தி தகவல்களை பெற்ற விவகாரத்தில் கையும் களவுமாக பிடிபட்டவர், தற்போது எங்களை கேள்வி கேட்பதா?.
இன்று தகவல் மற்றும் கருத்து சுதந்திரத்தை அணுகுவது ஜனநாயகமாக்கப்பட்டுள்ளது. உங்கள் குடும்பத்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே தான் வலிக்கிறது.
பெங்களூரு கலவரம் குறித்து இதுவரை உங்க கண்டனம் வரவில்லை. எங்கே போனது உங்கள் தைரியம்” என்று மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















