கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி, 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.பிரதமரின் கிஷான் திட்டத்தில் சேர நீங்க விவசாயியாக இருப்பது கட்டாயம்..ஆனா தமிழகம் முழுவதும் ஆதார் விவரம், அடையாள அட்டை ஆகியவற்றை இடைத்தரகர்களிடம் யார் தந்தாலும் போதும் முதல் தவணையாக ரூபாய் 2 ஆயிரம் உடனே வந்து சேரும்.ஒவ்வொருவரிடமும் கமிஷன் தொகையாக தலா ஆயிரம் ரூபாயை இடைத் தரகர்கள் பெற்றுள்ளனர்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் இவர்கள் எல்லாம் சட்டவிரோதப் பயனாளிகள் விவசாயிகளோ அல்லது விவசாயக் கூலித் தொழிலாளர்களோ இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு விவசாயிகளுக்கான உதவித் தொகை கிடைத்திருக்கிறது.விவசாயத்துறையை சாராதவர்களின் ஆவணங்களை வாங்கி, வங்கியில் போலி கணக்கு தொடங்கி, பிரதமரின் கிசான் திட்டத்தில் கமிஷன் பெறும் மோசடி தமிழகம் முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருந்தது..இதன் பின்னணியில் பெரும் கும்பல் செயல்படுகிறது என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ளது.கரூர் மாவட்டத்தில் 1500 போலி பயனாளிகள். இரண்டு தவணைகளில் ரூ. 60 லட்சம் வரை மோசடி.விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 11,200 போலி விவசாயிகள்.மோசடியாக சேர்ந்த 11,200 பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறிமுதல்.திருவாரூர் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 375 போலி விவசாயிகள்.ரூ.15.40 லட்சம் வரை மோசடி.திருவண்ணாமலை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில், 18 கோடி ரூபாய் முறைகேடு முறைகேடாக செலுத்தப்பட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1.51 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். அதன்பின் கொரோனா காலத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகின்றது.கரூர் மாவட்டத்தில் 85 பேர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்பு.பெரம்பலூர் 1,700 பேர், 2 தவணைகளில் ரூ.68 லட்சம் முறைகேடாக நிதி உதவி இதுவரை ரூ.11 லட்சம் வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தமாக கிசான் திட்டத்தில் 2 லட்சம் பேர் மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. இதனால் கிசான் திட்டத்தின் கீழ் அவர்கள் பெற்ற பணம் திருப்பி வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன் படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தில் மோசடி செய்த நபர்களிடம் இருந்து இதுவரை ரூ.5.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிசான் திட்டத்தில் நடந்த ஊழலில் இதுவரை பல கோடி ரூபாய் அளவிற்கான பணத்தை போலியான விவசாயிகள் கணக்கில் இருந்து மத்தியரசு அதிரடியாக கைப்பற்றியுள்ளது.
மோடி பணம் என்று கூறி இடைத்தரகர்கள் ஆவணங்களை பெற்று கிசான் திட்டத்தில் அதிகாரிகள் முறைகேடாக இணைந்துள்ளனர்.இந்த ஊழல் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் யாரும் வாயை திறக்கவில்லை.தமிழன்டா,ஏழை விவசாயிகள் என்பதால் கட்சிகள் அமைதி காக்கும் இந்த போக்கு கேவலமானது.இதில் சம்மந்தபட்ட அனைவரும் கண்டறியபட்டு முறைகேடாக வெளியே சென்ற பணம் அத்தனையும் அரசு மீட்க வேண்டும்.இதில் சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் போலி விவசாயிகளாக இணைந்து பலன் பெற்ற நபர்கள் மீதும் நடவடிக்கை வேண்டும்.மோடி தரும் அனைத்து திட்டங்களையும் நேரடியாகவும் திருடியும் பலன் பெற்று விட்டு கோ பேக் மோடி என பேசுவது தமிழகத்தின் நன்றி கெட்ட தனம்.