மத்திய அரசு புதிய வேளாண் சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் தேவைப்பட்டால் சிறு சிறு திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்கிறது. ஆனால் போராட்டக்காரர்கள் மூன்று வேளாண் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.
உண்மையான விவசாயாக இருந்தால் ஏதாவது ஒரு முடிவுக்கு வருவார்கள் ஆனால் இவர்கள் விவசாயாக இருப்பது போல் தெரியவில்லை.
இவர்களிடம் இன்னும் நூறு முறை பேச்சு வார்த்தை நடத்தினாலும் நிலை மாறப்போவதில்லை. அவர்களுடைய நோக்கம் ஒன்றே ஒன்று தான். வன்முறை ஏற்படுத்தி அதனால் பல உயிர்கள் பலியாக வேண்டும். அதற்கு பிரதமர் மோடியை காரணமாக்க வேண்டும் என்பது தான்.
போராட்டக்காரர்களை பின்னால் இருந்து இயக்குபவர்களின் உறுதியான இறுதியான ஒரேயொரு நோக்கமாகும். பிரதமர் மோடியை ஜனநாயக தேர்தல் அரசியலால் வீழ்த்த முடியாது என்பதை நன்கு உணர்ந்த மோடியின் எதிரிகள் எல்லோருமே ஓன்று சேர்ந்து மோடிக்கு விட்டிருக்கும் சவால் தான் இந்த போராட்டமாகும்.
இது மோடிக்கு மட்டுமல்ல மோடியை எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் என எல்லோருக்குமே இது நன்கு புரியும். சரி இனி பிரதமர் மோடி என்ன செய்ய போகிறார் என்பது தான் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த போராட்டம் மோடியை வீழ்த்திவிடுமா? அல்லது போராட்டம் முடிவுக்கு வருமா? நீதிமன்றம் என்ன செய்ய போகிறது? வன்முறை மற்றும் உயிர் பலிகள் இன்றி இந்த பிரச்சினை முடியுமா?
பிரதமர் மோடி, நீதிமன்றம், போராட்டக்காரர்கள் என மூன்றையும் கடந்து “காலம்” என்ற ஒன்று இருக்கிறது. அது எப்போதும் தனது தீர்ப்பை தந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பிரச்சினையில் என்ன தீர்ப்பை எழுதபோகிறது? காலம் கனியட்டும்.