திமுகவின் முன்னாள் தலைவர் திரு. தட்சிணாமூர்த்தி எனும் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் திமுக தலைவரும் கருணாநிதியின் அரசியல் வாரிசுமான மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் துரைமுருகன், டி ஆர் பாலு, கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் பேரன் உதயநிதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் சமூக இடைவெளியின்றி அங்கு கூட்டம் காணப்பட்டது. அதிமுக அரசு இதை வேடிக்கை பார்க்கிறது. மேலும் ட்விட்டரில் எப்போதும் போல் சண்டை நடக்கிறது . ஒருபக்கம் திமுவினர் #எங்கெங்கும்கலைஞர் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். திமுகவின் எதிர்ப்பாளர்கள் #FatherofCorruption என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
#FatherofCorruption டிவீட்களில் முன்னதாக திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் ஊழல்கள் , அவர் ஆட்சியின் போது தமிழகம் எப்படி இருந்தது. மின்வசதி இன்றி இருந்தது நிலஅபகரிப்பு,தினகரன் பத்திரிக்கை எரிப்பு, சர்க்காரியா கமிஷன் என பலவற்றினை நினைவு கூர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள். தற்போது டிரெண்ட் ஆவது #FatherofCorruption.

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















