வீட்டில் மத போதனைகள் நடத்தப்படும் என அறிவித்துவிட்டு விபச்சாரம் செய்த கிருஸ்துவ மத போதகர் ‘விபச்சாரம் நடத்த பிரச்சனைகள் ஏதும் வராமல் இருப்பதற்காக வீட்டிற்கு வெளியே மதபோதகர் ‘பெடரல் சர்ச் ஆப் இந்தியா சர்ச் என்ற பெயர் பலகை வைத்து உள்ளே விபச்சார விடுதி நடத்தி வந்த லால் சைன்சிங்கை காவல்துறைஅதிரடியாக கைது செய்தது. ரெய்டின் போது சிக்கிய பெண்களில் தாயும் மகளும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நிதிரவிளை அடுத்த எஸ்.டி. மாங்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ’மதபோதகர் லால் சைன்சிங்’ பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயர் பலகை இருந்ததது . மதபோதகர் என்பதால் அந்த வீட்டிற்குள் கிறிஸ்த்துவ மதபோதனை நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அடிக்கடி ஆண்கள் குடித்துவிட்டு வருவது பெண்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை பார்த்த அப்பகுதியினருக்கு சந்தேகத்தை கிளப்பியது. அப்பகுதி மக்களை மத போதனைக்கு அனுமதிக்கவில்லை கிறிஸ்தவ போதகர்.
இதனால் திடீரென அப்பகுதியினருக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. மத போதனை என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்கள். அப்பகுதி மக்கள் ‘பெடரல் சர்ச் ஆப் இந்தியா’என்ற பெயரில் பிரார்த்தனை மையம் நடத்தி வருகிறார். இங்கு சந்தேகத்துக்குரிய வகையில் பெண்கள், ஆண்கள் வந்து செல்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு போலீசார் சோதனை நடத்தினர். தொடர்ந்து லால் ஷைன்சிங் மற்றும் பனங்காலையை சேர்ந்த ஷைன் 34, மேக்கோடு ஷிபின் 34, ஞாறான்விளை ராணி 55, சுகந்தி 40 என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். 19 வயது இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 19 வயது பெண்ணை தாயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. நித்திரவிளை காவல்துறை விசாரிக்கின்றனர்.