தமிழகத்தில் சிலரின் தூண்டுதலால் இஸலாமியர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றார்கள்.இந்த போராட்டங்களுக்கு திமுக கை கொடுக்கிறது. இதை முதல்வர் பழனிச்சாமி அவர்களும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தி.மு.க வை சேர்ந்த தமிழன்பிரசன்னா குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேசவும் பிரதமர் மோடியை தவறாக பேசவும் அந்த போராட்டம் நடத்தும் இஸ்லாமியர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம், வாங்கி கொண்டு
தான் அந்த போராட்டத்தில் ஈடுபட்டார் . என நாம் தமிழர் கட்சியினரை சேர்ந்த பிரமுகர் மேடையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு வேறு சில காரியங்களும் செய்து கொடுத்துள்ளார்கள் அந்த போராட்ட குழு இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோக பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்து சென்றிருந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸலாமியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர், முக்கிய இடங்களில் பந்தல் போட்டு போராட்டம் நடத்துகின்றார்கள்.
பள்ளிவாசல் முன்பு போராட்டங்களை நடத்தி வருவதும்,மக்களுக்கு இடையூறாக இருக்கிறார்கள். இதற்கு தி.மு.க அதன் கூட்டணி இயக்கங்கள், மற்றும் லெட்டர் பேட் அமைப்புகள் ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
திமுகவை சேர்ந்த தமிழன் பிரசன்னா தொடர்ந்து குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டு மிக மோசமாக கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பிரதமர் மோடி அமித் ஷா பாஜக தலைவர்களை விமர்சனம் செய்தார்.
இந்த அப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சார்ந்த ஒருவரை கலந்து கொள்ள அழைத்துள்ளனர் போராட்டக்குழு அதற்கு அவர் வரமுடியாது தமிழன் பிரசன்ன கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறினார். போராட்ட குழு நிர்வாகி அவர் ஒன்றும் சும்மா வரவில்லை 50 ஆயிரம் வாங்கி கொண்டுதான் பேச வருவதாகவும் எனவே நீங்கள் தமிழன் பிரசன்னா மேடை என்று எண்ண வேண்டாம் என்று தன்னிடம் கூறியதாக என நாம் தமிழர் கட்சியினரை சேர்ந்த பிரமுகர் மேடையில் கூறியுள்ளார்.