ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறதுஇந்தநிலையில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பட்டியிலன நபரை தனது ‛ஷூ’வை நக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் ராஜஸ்தான்டிஎஸ்பி தலித் நபரின் தலையில் தலையில் சிறுநீர் கழித்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தானில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. மேலும் அங்கு காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு ஏகப்பட்ட அதிருப்தியில் உள்ளார்கள். கமிஷன் அரசு தான் அங்கு நடக்கிறது என மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாம்வா ராம்கர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோபால் மீனா.அந்த பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் சிவ்குமார் பரத்வாஜ்.
காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா, சிவ்குமார் பரத்வாஜ் ஆகியோர் தலித் சமுதாயத்தை சேர்ந்த 51 வயது நபரை துன்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது அங்கு போலீஸ் சூப்பிரண்டாரான சிவ்குமார் பரத்வாஜ் உள்பட காவலர்கள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு வேலைசெய்து வந்த தலித் நபரை தாக்கி அங்கிருந்து இழுத்து சென்றுள்ளனர். மேலும் டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ், தலித் சமுதாயத்தை சேர்ந்தவரின் தலையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அதோடு காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் வர்மா ஷூவை நக்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் விடாமல் காவல் நிலையம் சென்று வந்துள்ளார். ஆனால் காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் புகாரை வாங்க மறுத்ததோடு மிரட்டியுள்ளார்கள். புகார் அளித்தால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து தலித் சமுதாயத்தை சேர்ந்த நபர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.
தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் வழங்கிய புகாரில் டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் தனது தலையில் சிறுநீர் கழித்ததாகவும், காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா நாக்கால் ஷூவை நக்கி சுத்தம் செய்ய வைத்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் எப்ஐஆரில் காங்கிரஸ் எம்எல்ஏ கோபால் மீனா, டிஎஸ்பி சிவ்குமார் பரத்வாஜ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.