இந்து முன்னணி நிர்வாகியின் காருக்கு தீ வைப்பு! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம் ! காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்குமா ?

திருப்பூரில் உள்ள இந்து முன்னணி நிர்வாகியின் கார் இன்று அதிகாலை தீப்பிடித்து எரிந்தது இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்,அருகே உள்ள திருநீலகண்டபுரத்தில் வசித்து வருபவர் மோகன் (35), இவர் தமிழக இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்டச் செயலாளராக இருக்கிறார்.மோகன் தனது காரை வீட்டின் அருகே நிறுத்துவார். அதே போல் நேற்று வீட்டின் அருகே காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மோகனின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த தெருவின் வழியாக சென்ற மக்கள்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே மோகன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலுமாக எரிந்து கருகியது.

இதையடுத்து காவல்துறைக்கு சம்பவம் குறித்து தங்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

இந்து முன்னணி நிர்வாகியின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரவியது அங்கு இந்துமுன்னணியினர் குவிய தொடங்கினார்கள். மேலும், காருக்குத் தீ வைத்த மர்ம நபர்களை கைது செய்யக்கோரி புதன்கிழமை காலை 8.40 மணி முதல் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து முன்னணி தலைவர் கடேஸ்வரா சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினரிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து இந்துக்கள் மீதான தாக்குதல் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. காவல்துறை மௌனம் காக்கிறது,.

Exit mobile version