அபுதாபியில் முதல் இந்து கோவிலின் அமைக்கும் பணிகள் மிக விரைவாக கட்டி முடிக்க அதன் பணிகள், முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.மேற்கு ஆசிய கண்டத்தின் ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகர் அபுதாபி இங்கு இந்துக்கள் அதிக அளவில் வாழ்கின்றார். இஸ்லாமிய நாடான அபுதாபியில் இந்து வரை இந்து மக்கள் வழிபடுவதற்கென கோவில்கள் இல்லை.
இந்தியாவை போன்று அல்ல. இந்தியா மதசார்பற்ற நாடு அதனால் தெருவிற்கு தெரு சர்ச் மசூதிகள் உள்ளன. ஆனால் அங்கோ அப்படி இல்லை.கோவில் வேண்டும் என அங்குள்ள மக்கள் பல முறை வலியுறுத்தியுள்ளன. அதற்கு காங்கிரஸ் அரசு ஒரு வேண்டுகோள் கூட அந்த அரசிடம் வைக்கவில்லை. இதை தொடர்ந்து மோடி அரசு ஏற்றவுடன் இந்து கோவில் கட்ட அனுமதிக்க அபுதாபி அரசிடம் வேண்டுகோள் வைத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் முதல் இந்து கோவில், பிரமாண்டமாக அமையவுள்ளது.
கடந்த, 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, துபாய்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு காணொளி காட்சி மூலம், கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். ‘போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்’ என்ற அமைப்பு, அந்த கோவிலை கட்டி வருகிறது.
இது குறித்து, அந்த கோவில் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் அசோக் கொடேச்சா கூறியதாவது:சுமார், 3 ஆயிரம் சதுர மீட்டர் அளவிலான அடித்தளத்தில், ‘பிளை ஆஷ்’ எனப்படும் நிலக்கரி சாம்பலில் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கொட்டப்பட்டது. பொதுவாக, அடித்தளத்தை வலுப்படுத்த, கம்பிகள் பயன்படுத்தப்படும்.
ஆனால், இந்தக் கோவில், இந்திய பாரம்பரிய கட்டடக்கலையை அடிப்படையாக வைத்து கட்டப்படுவதால், உருக்கு மற்றும் இரும்புக் கம்பிகளுக்கு பதிலாக, பிளை ஆஷ் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார். எனவே மிக விரைவில் அபுதாபியில் இந்துக்கோவில் குடமுழுக்கு நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்பர் என தகவல்கள் வெளியாகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.













