அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.17 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது
பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார்.
இதுவரை 30 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.
விபத்துக்குள்ளான விமானத்தில் பிரிட்டனைச் சேர்ந்த 52 பேர் பயணம் செய்ததாக தகவல்.
2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் விமானத்தில் இருந்துள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவு.
விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 12 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் இருந்துள்ளனர்.
அடுத்தடுத்து இயங்க உள்ள அனைத்து விமானங்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து – விமான நிலைய நிர்வாகம்.
அகமதாபாத்தில் விமான ஓடுதளம் மூடப்பட்டதால் இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
விமானம் மோதிய கல்லூரி விடுதி கட்டிடத்திற்குள் இருந்த மாணவர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம்.
விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த நிலையில், பல மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்.
#Breaking || ஏர் இந்தியா விபத்து – 133 பேர் பலி என தகவல்
அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 133 பயணிகள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
