அம்ஜத் பாட்சாவின் 7 ஸ்டார் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு: 40 பேருக்கு வாந்தி மயக்கம்! மக்களே உஷார்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா அசைவ 7ஸ்டார் ஓட்டல் நடத்தி வருகிறார். சென்ற இரு நாட்களுக்கு முன் அதே ஏரியாவை சேர்ந்த மக்கள் எப்போதும் போல் அஜ்மத் பாட்சா 7 ஸ்டார் ஒட்டலில் இரவு சிக்கன் தந்தூரி சிக்கன் பிரியாணி, போன்ற உணவுகளை சாப்பிட்டுள்ளார்கள்.

உணவருந்திய 40க்கும் மேற்பட்டோருக்கு உடல் நிலை சரியில்லாமல் வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர். மேலும் மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை பலினின்றி 10 வயது சிறுமி லோசிகா என்ற குழந்தை நேற்று இறந்தது. இதனை தொடர்ந்து அந்த ஹோட்டலுக்கு நகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு தர கட்டுப்பாடு அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு சீல் வைத்தனர்.

தற்பொழுது அந்த ஓட்டலின் உரிமையாளர் அம்ஜத் பாஷா அந்த ஹோட்டலில் பணிபுரியும் சமையல் மாஸ்டர் முனியாண்டி இருவரையும் ஆரணி நகர காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனைச் சட்டம், 284, 337, 304A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உணவில் நச்சுப்பொருட்கள் கலந்தது, அதனால் மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது 304A கொலையில்லா மரணம் என்று மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக ஆரணியில் இயங்கி வரும் அனைத்து அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆய்வாளர்கள் சேகர் இளங்கோ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உணவுகள் தயாரிக்கும் சமையல் கூடம் மற்றும் சமையலர்கள் பயன்படுத்தும் பயன்படுத்தும் பொருட்களின் தரம் சிக்கன், மீன், நண்டு, மட்டன் உள்ளிட்ட மாமிச பொருட்களை ஆய்வு செய்தனர்.

அதில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை பதப்படுத்தும் கூலர் இயந்திரத்தின் தன்மையைப் பொருத்து அதிலிருந்த கெட்டுப்போன 15 கிலோ சிக்கன், மீன், மட்டன் ஆகியவற்றை பறிமுதல் செய்து அதில் கெமிக்கல் ஊற்றி அழித்தனர்.

மேலும் பாதுகாப்பற்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து அந்த ஓட்டல் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதில் அரசு விதித்த நடைமுறைகளை பின்பற்றி மசாலா பொருட்கள் கொண்டு இயக்க வேண்டும் மற்ற பொருட்களை தடை செய்யபட்டுள்ளதாகவும் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டன. அசைவ பிரியர்கள் குறைந்த விலைக்கு பிரியாணி என ஏதாவது கடையில் அசைவ உணவுகளை சாப்பிட்டுவிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள் பின் விளைவுகள் அதிகம்!

Exit mobile version