தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ஆல் இந்தியா கோட்டாவுக்கு போய் விடும்.
மீதம் 150-23=127 சீட். இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும்.மீதம் 64 சீட் கல்லூரியின் கோட்டா.அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம்.
64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது, தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு, (கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்).
இது NEET க்கு முன்பு இருந்த நிலை.
NEET க்குப் பிறகு :
2017 NEET தேர்வை ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு ,150 சீட்டில் 23 (15%) ஆல் இந்தியா மதிப்பெண் அடிப்படையில் போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும்,127 சீட்டுகளையும் நீட் மதிப்பெண் அடிப்படையிலும் அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது..
அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC, ST, MBC, BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும், மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது.
இந்த OC ஒதுக்கீட்டிலும் SC, ST, MBC, BC மாணவர்களுக்கும் இடம் உண்டு.மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு. சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.சராசரியாக ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால்NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.வேண்டுமானாலும்
தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வீல் வீல் என்று கத்துகிறான் கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET வேண்டுமா? வேண்டாமா?… என்று.