தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கேரளாவிலிருந்து குப்பைகள் கொண்டுவது கொட்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல இடங்களில் பொது மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால் எந்த ஒரு பெரிய நடவடிக்கையும் இல்லை என மக்கள் புலம்பி வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை கேரள மாநில கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது தொடர்ந்தால், இங்கிருந்து குப்பைகளை லாரியில் அள்ளி கேரளாவில் கொட்டிவிடுவோம் மேலும் முதல் லாரியில் நானே செல்வேன் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து இந்த விஷயம் தமிழகத்தில் அனல் பறந்தது மருத்துவ கழிவுகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது
இதனை தொடர்ந்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக முதல்முறையாக பொதுச்சொத்து சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தில், பிணையில் வெளியே வர இயலாத பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது கழிவுகள் எந்த எந்த நிறுவனங்களில் உருவானதோ, அந்த நிறுவனங்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுறுத்தி கடிதம் அனுப்பியது பசுமை தீர்ப்பாயத்தால் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியமே கழிவுகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக இவ்வளவு கடுமையான சட்ட நடவடிக்கை மற்றும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என நெல்லை மாவட்ட ஆட்சியரே கூறியுள்ளார்.
இந்த சூழலில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள் குறித்து விசாரணையில் இறங்கியது தேசிய பசுமை தீர்ப்பாயம். மேலும் கேரளா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் து இந்த கழிவுகள் அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே குப்பைகளை கொண்டு சென்றுள்ளார்கள் கேரள அதிகாரிகள் தமிழகம் வந்து மருத்துவ கழிவுகளை 11 லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் வரலாற்றில் முதன் முறையாக நடந்துள்ளது.
மேலும் இத்தனை ஆண்டுகள் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தது ஆனால் ஆண்ட ஆளும் அரசாங்கம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்க வில்லை தற்போது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கிய பிறகு தான் இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறி வருகிறார்கள்.