உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்க வில்லை இந்த நிலையில் டில்லி அனுமதியின்றி முஸ்லீம்கள் மாநாடு ஒன்று நடந்துள்ளது இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள் வெளிநாட்டவர்கள், உத்திர பிரேதேசத்தில் உள்ள மசூதிகளில் சட்ட விரோதமாக தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் டில்லியில் கடந்த மதம் நடந்த , தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த வெளிநாட்டவர்கள் என்றும் அவர்களில் சிலர், உத்தர பிரதேச மாநிலம், லக்னோ, மீரட் ஆகிய மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் தங்கியிருப்பதாக வந்த தகவல்களை ஓட்டி, அம்மாநில காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து இவர்கள், இந்தோனேஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சூடான், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், என கண்டறியப்பட்டுள்ளது. என, மீரட் மாவட்ட – ரூரல் – எஸ்.பி., அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். முறையான அனுமதியின்றி, வெளிநாட்டவர்களை தங்க வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.