தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் முழு ஊரடங்கும் மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கும் கடைபிக்கப்பட்டுவருகிறது.
மாவட்டம் விட்டு மாவட்டம் போக கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் மாவட்ட சுங்கச்சாவடி எல்லைகளில் காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் இரவும் பகலுமாக உழைத்து வருகிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி தி.மு.க முன்னாள் எம்.பியும் பின் அ.தி.மு.கவில் வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த கே.அர்ஜுனன் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். எங்கே சென்று வருகிறீர்கள் இ -பஸ் உள்ளதா என கேட்டுள்ளார் அதற்கு அர்ஜுனன் அவர்கள் நான் யார் தெரியுமா என்னை தெரியாமல் ஏன் நீ இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என சொல்லி கோவப்பட்டு திட்ட ஆரம்பித்த முன்னாள் எம்.பி கே.அர்ஜுனன் தரக்குறைவான வார்த்தைகளால் காவல்துறையினரை திட்ட ஆரம்பித்தார்.
மிகவும் கோபமடைந்த கே.அர்ஜுனன் அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளரை காரை விட்டு இறங்கி வந்து தாக்க முயன்றார். பின்னர் ஆத்திரமடைந்த முன்னாள் எம்.பி காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்தார்.இதனையடுத்து காவல்துறையின் கும் அர்ஜுனன் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















