சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்றைய தினம் ம மதுரை மத்திய சிறைச் சாலையை நேரில் ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின் போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.,
அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : மதுரை மத்திய இந்த சிறைச்சாலை ஆங்கிலேயர் காலத்து கட்டிடம் என்பதால் இங்குள்ள வசதிகளை அதிகரிக்க கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறைச்சாலையை வேறிடத்தில் அமைக்க முதலமைச்சரின் ஆலோசனையோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.சிறைக் கைதிகள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மிகுந்த அக்கறை கொண்டவர். சிறைச்சாலையில் மருத்துவ வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விடுதலை கோரும் கைதிகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்.
மேலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள ஏழு பேர் விடுதலை குறித்து சட்ட துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஏழு பேர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது . என்றார் மேலும் இந்த விவகாரத்தில் நிறைய சட்ட சிக்கல்களை உருவாக்க பார்க்கிறார்கள் என்றும் முதலமைச்சர் அதில் எந்த சிக்கலிலும் சிக்கிக் கொள்ள மாட்டார். அந்த விவகாரத்தில் அனைவரும் ஏற்கும் முடிவை முதலமைச்சர் எடுப்பார். தெரிவித்தார் சட்ட துறை அமைச்சர்.
நீட் தேர்வு குறித்த ஆய்வுக் குழு மக்களின் கருத்துக்களை பெறவே நியமிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்றங்களுக்கு எதிராக அந்த குழு உருவாக்கப்படவில்லை. அந்த ஆய்வுக்குழு சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டே நியமிக்கப்பட்டு உள்ளது.என்றார்.