தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் உதயநிதி நெருங்கிய நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி,. இவருக்கும் அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் நவல்பட்டு விஜிக்கும் இடையே அரசியல் தகராறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நவல்பட்டு விஜியின் ஒன்றிய செயலாளர் பதவியை பறித்தது திமுக தலைமை. மேலும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கியது.
இதனை தொடர்ந்து கட்சிக்காக உழைத்து வந்த திமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் நவல்பட்டு விஜி
கோபமடைந்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அச்சுறுத்தும் விதமாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வழியாக கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் நவல்பட்டு விஜி மீது நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நவல்பட்டு விஜி அணுகினார்.
இந்த வழக்கு தொடர்பான முன்ஜாமீன் மீதான மனு நிலுவையில் உள்ள நிலையில் இன்று நவல்பட்டு விஜியை காவல்துறையினர் திடீரென்று சனிக்கிழமை அன்று கைது செய்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் விடுமுறை, நாளை மறுநாள் பிரதோஷம் காரணமாக நீதி மன்றம் செயல்பாடுகள் தாமதமாகும்,.
செவ்வாய் கிழமை மிலாடி நபி காரணமாக நீதிமன்ற விடுமுறை இதன் காரணமாக ஜாமீன் கிடைக்க தாமதம் ஏற்படும் இந்த நிலையில் தான் சனிக்கிழமை பார்த்து திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட நவல்பட்டு விஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.நவல்பட்டு விஜி கைது செய்ய சென்னையில் இருந்து உத்தரவு வந்ததை அடுத்து ஐஜி அலுவலகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதுதான் திமுககீழ்மட்ட நிர்வாகிகள் நிலைமை என திருவரம்பூர்தொகுதி திமுகவினர் புலம்பி வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















