கா‌‌ஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வேட்டையாடியது பாதுகாப்பு படை !

ஜம்மு கா‌‌ஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள சூனிமார் என்ற இடத் தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே கா‌‌ஷ்மீர் காவல்துறையினருடன் மத்திய ரிசர்வ் காவல் படையினரும், பாதுகாப்புபடையினரும் இணைந்து நேற்று காலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் சோதனை மேற்கொண்ட பகுதியில் செல்போன், இணைய சேவைகள் துண் டிக்கப்பட் டன. அங்கிருந்த பொது மக்கள் பாதுகாப்பான இடத் திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட இடத் திற்கு வந்தவுடன், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை சரண் அடையுமாறு பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் பயங்கரவா தி கள் வீரர்களை நோக்கி தானியங்கி துப்பாக்கிகளால் சுடத் தொடங்கினர். உடனே சுதாரித்துக் கொண்ட வீரர்கள், பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டை சிறிது நேரம் நீடித்தது.

இதில் 3 தீவிரவாதிகள் சுட் டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் 2 பேர் ஜெய்‌‌ஷ்-இ-முக மது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். அதில் ‌ஷாகுர் பரூக் லங் என்பவன் கடந்த மே மாதம் 20-ந்தேதி 2 எல்லை பாது காப்பு வீரர் களை கொன்றவன் . மற்றொறு தீவிரவாதி பெயர் ‌ஷாகித் அகமது பாத். தப்பி ஓடிய மற்ற தீவிரவாதிகளை தேடும் பணியில் பாது காப்பு படையி னர் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே கா‌‌ஷ்மீரின் குல் காம் மாவட்டத்தில் எல்லை பாதுப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த இம்ரான் பாப் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். ஜெய்‌‌ஷ்-இ-முக மது என்ற பயங் கர அமைப்பை சேர்ந்த இவன், கண்ணிவெடி தயாரித்து நாசவேலை செய்வதில் முக்கிய பங்காற்றுபவன் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த நிலை யில் வடக்கு கா‌‌ஷ் மீ ரின் சோபியான் மாவட் டம் தர்சூ என்ற இடத் தில் ரா‌‌ஷ் டி ரிய ரைபிள் படை, மத் திய ரிசர்வ் காவல்படையுடன் இணைந்து கா‌‌ஷ்மீர் மாநில போலீஸ் சிறப்பு படை யினர் நேற்று தீவிர ரோந்துப் ப ணியில் ஈடுபட்டனர். அப் போது ல‌‌ஷ் கர்-இ-தொய்பா இயக் கத்தை சேர்ந்த 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி மற் றும் பயங்கர ஆயு தங் கள் பறிமுதல் செய்யப்பட் டன.

Exit mobile version