தமிழக அரசியலில் ஆண்ட கட்சிகளான அ.தி.மு.க வில் இருந்து தி.மு.க விற்கும், தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க விற்கும் மட்டுமே கட்சி மாறுவார்கள். இப்போது இந்த இரு கட்சியில் இருந்தும் வெளியே வருபவர்களின் இருப்பிடமாகா பா.ஜ.க இருக்கிறது.இது இரு திராவிட கட்சிகளுமே நல்ல செய்தி அல்ல. அ.தி.மு.க வில் தற்போது பதவியில் இருப்பவர்கள் பல பேர் பா.ஜ.கவின் ஆதரவான நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்கள்.
தி.மு.க வின் தற்போதைய நிலை அதே நிலை. தற்போது தி.மு.க வின் மாவட்ட செயலாளர்கள் 14 பேர் பா.ஜ.க வுடன் பேசி வருவதாக தெரிய வந்துள்ளது.இந்த தகவல் தெரிந்த பின்னர் தான் ஸ்டாலின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி எம்.எல்.ஏ க்கள் கூட்டம் என காணொளி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் மிகவும் தன்மையாக பேசியுள்ளார். முக்கியமாக மாவட்ட செயலாளருக்கு தேவையானா அனைத்து வசதிகளும் உதவிகளையும் செய்து தருவதாக கூறியுள்ளார். இனி உதய நிதியின் செயல்பாடு குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார் என செய்திகள் வந்துள்ளன.
இதே தி.மு.க வில் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு நிலையில் உள்ளவர்கள் பலர் உள்ளனர் ஆனால் நடிகர் ரஜினி அரசியல் நிலை உறுதியாக தெரியாத நிலையில் பாஜகவின் பார்வை இப்போது தன் கவனத்தை தி.மு.க பக்கம் திருப்பி இருக்கிறது.
அனேகமாக வரும் தேர்தல்களில் பாஜக தமிழ்நாட்டில் கால் ஊற்றும் நிலைக்கு வந்து விட்டது என்றே கூறலாம். அதுவும் விவசாயிகளுக்கான 6000 ரூபாய் திட்டம் கிராமத்தில் மிக பெரும் வரவேற்பை பெற்றதுடன் மோடியின் பெயரை கிராமமக்கள் உச்சரிக்கும் நிலைக்கு பா.ஜ.க வளர்ந்து விட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலங்களில் பம்பரமாய் சுற்றி மக்களுக்கு நிவாரண பொருட்கள் உணவு பா.ஜ.க வழங்கியது. இதுவும் பாஜகவுக்கு நல்ல பெயரை வாங்கியுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க கணிசமான இடங்களை பெரும் என்பது நிதர்சனமான உண்மை.
அதனை தொடர்ந்து பாஜகவின் இலக்கு 2026 தமிழகத்தில் பா.ஜ.க வின் ஆட்சியாக இருக்கும். அதிமுகவில் தலைவர் இன்னும் நிலைப்பாட்டிற்கு வரவில்லை. திமுகவில் ஸ்டாலின் தான் தலைவர்.ஆனால் இரு கட்சிகளின் தடுமாற்றமும் ஒன்றுதான். ஸ்டாலின் ஒரு ஓட்டு வங்கியை தக்க வைப்பதற்காக மற்ற ஓட்டு வங்கிகளை இழப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவரின் நிலைப்பாடு இதே போல் தொடர்ந்தால் திமுக தமிழகத்தில் காங்கிரசின் நிலைமைக்கு சென்றுவிடும் என்கிறார்கள்