மே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது.
கொரோனா காரணமாக நாட்டின் எரிபொருள் நுகர்வு சுமார் 17% வரை சரிந்துள்ளது, ஆகையால் எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரிப்பு செய்வதை நிறுத்தியுள்ளன, இதன் காரணமாக தேங்கி கிடக்கும் கச்சா எண்ணெயை அரசு வாங்கி வருகிறது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்,பாரத் பெட்ரோலியம், மங்களுர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றிடம் இருந்து ISPRL – Indian Strategic Petroleum Reserves Limited கச்சா எண்ணேய் வாங்கி மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் முலோபாய எரிபொருள் கிடங்குகளை நிரப்ப முடிவ செய்துள்ளதாக அதன் தலைமை அதிகாரி ஹெச். பி.எஸ். அஹுஜா தெரிவித்தார்.
தென்னிந்தியாவில் உள்ள மூன்று முலோபாய எரிபொருள் கிடங்குகளில் சுமார் 159 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட சுமார் 3.7 கோடி பேரல்களை சேமித்து வைக்க முடியும்,
மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதை அடுத்து துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய்யை மிக வேகமாக வாங்கி வருகிறது #நமதுஇந்தியா