குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்தரபாய பட்டேல் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல்
தேர்தலில் பிஜேபிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைத்து இருப்பதன் மூலமாக பிஜேபி. தலைவர்களை நம்பி அல்ல சித் தாந்தத்தை நம்பி உள்ள கட்சி என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
பிரதமர் மோடி முதல்வராக இருந்த பொழுது நடை பெற்ற 2011 காந்தி நகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தான் வெற்றி்பெற்று இருந்தது.கடந்த 2016 காந்தி நகர் மாநக ராட்சி தேர்தலில் 16 வார்டுகளில் மட்டுமே வெற்றி. பெற்று இருந்தது .ஆனால் இப் பொழுது 41 வார்டுகளில் வெற்றி பெற்று இருக்கிறது.
இதற்கு முக்கியமான காரணம் மோடியின் மீது நம்பிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது.
மோடி முதல்வராக இருந்த கா லத்தில் கூட வெற்றி பெற முடியாத காந்தி நகரில் பிஜேபி இப்பொழுது
புதிய வரலாறு படைத்து இருக்கிறது.
குஜராத்தில் கடந்த 7 வருடங்களில் நடந்த தேர்தல் முடிவுகள்:
*2014 பாராளுமன்ற தேர்தல் – 26/26 எம்.பி பா.ஜ.க வெற்றி
*2017 சட்டமன்ற தேர்தல் – பா.ஜ.க வெற்றி
*2019 பாராளுமன்ற தேர்தல் – 26/26 எம்.பி பா.ஜ.க வெற்றி
*2020 சட்டமன்ற இடைத்தேர்தல் – 8/8 எம்.எல்.ஏ பா.ஜ.க வெற்றி
*பிப்ரவரி 2021 உள்ளாட்சி தேர்தல் – 6/6 மாநகராட்சி, 31/31
ஜில்லா பஞ்சாயத்து, 185/231 தாலுக்கா பஞ்சாயத்து, 77/81 நகராட்சி பா.ஜ.க வெற்றி
*அக்டோபர் 2021 – 175/228 உள்ளாட்சி இடங்களில் பா.ஜ.க வெற்றி.