மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டு வரும் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அட்டூழியங்களை செய்து வருகிறார்கள் நமது இந்து பண்டிகைகளை அவர்கள் பண்டிகை போல மக்கள் மனதில் மடைமாற்றி நமது விழாக்களை மறக்கடிப்பதற்காக கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்த மக்களை திரும்பவும் விநாயகர் சதுர்த்தி மூலம் திரும்பி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்
கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட ஜெப யாத்திரையின் விளைவால் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக கோவை செயின்ட் பால் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் நோட்டீஸ் அடித்து அப்பகுதியில் இருக்கும் மக்களுக்கு வழங்கியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இயங்கிவரும் செயின்ட் பால் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் செயின்ட் பால் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியால் அச்சடிக்கப்பட்ட நோட்டிஸ் நேற்று கோவை நகரம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
அந்த நோட்டிஸில் “கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி அன்று கோவையில் சிறப்பு ஜெப யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது விநாயகர் சதுர்த்தி நாளன்று அல்லது விநாயகர் சதுர்த்திக்கு அடுத்த நாளோ அல்லது இரண்டு நாள் முன்னதாகவே கோவை மாவட்டத்தில் உள்ள 100 வார்டுகளிலும் சபையாக குழுவாக அல்லது குடும்பமாக வாகனத்தில் அமர்ந்து கொண்டு ஜெப யாத்திரையில் ஈடுபட வேண்டும்” என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் 2017ஆம் ஆண்டு 200 வாகனங்களில் யாத்திரை சென்றதாகவும் 2018ஆம் ஆண்டு 1000 வாகனங்களில் யாத்திரை சென்று ஜெபித்ததாகவும் 2019ஆம் ஆண்டு இதே போல் யாத்திரை நடைபெற்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி மூன்று ஆண்டுகள் ஜெப யாத்திரை நடத்தியதன் விளைவாக கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை வெளியே கொண்டு வரக்கூடாது என்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் ஒரு குறிப்பிட்ட வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சிலையை கரைத்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தாங்கள் செய்த ஜெப யாத்திரையின் விளைவுதான் என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை காரணமாக வைத்து, விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில், விநாயகர் சிலைகளை நிறுவவும், அவற்றை கடலில் கரைக்கவும் தடை மற்றும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.