விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு தடை விதித்துள்ள திமுக அரசு மீது நாளுக்கு நாள் விமர்சனங்கள் அதிகமாகி வருகிறது. இந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்பட்டு வருகிறது திமுக அரசு.
இந்த நிலையில் இது குறித்து பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் திமுகமற்றும் உதயநிதியை விமர்ச்சித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி உதயநிதிக்கு வெறும் ஒரு மண் பொம்மையாக இருக்கலாம், ஆனால் ஒவ்வொரு இந்துகளும் நம்பும் கலாச்சாரம் பண்பாடு உணர்வு ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுகிறோம். தி.மு.க கோடிக்கணக்கான தமிழ் மக்களை காயப்படுத்த தீய கொள்கையை மக்களிடம் திணிக்கிறது
இந்துக்களின் ஒற்றுமையை உடைத்து, இந்துக்களின் மனநிலையை கெடுக்க திமுக முயல்கிறது. டாஸ்மாக், பேருந்துகள், பள்ளிகள், தியேட்டர்கள் மற்றும் பிற பொது இடங்கள் திறக்கப்படும் போது விநாயகர் சதுர்த்தியை மட்டும் தடை செய்வது ஏன்? திமுக மிஷனரிகளை மட்டுமே ஆதரிக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நெறிமுறையுடன் நடக்கட்டும். திமுக இந்துக்களுக்கு ஒரு பாவியாக மட்டுமே உள்ளது. இது விநாயகர் சிலைகளைச் செய்பவர்களையும், கொண்டாடும் பல கலைஞர்களையும் பாதிக்கிறது. இது அவர்களின் வயிற்றை அடிக்கிறது.
என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .