சிவகுமாரின் மருமகளும் நடிகர் சூர்யாவின் மனைவியுமான நடிகை ஜோதிகா, கடந்த மாதம் நடைபெற்ற விருது விழா ஒன்றில் தமிழகத்தின் அடையாளம் தஞ்சாவூர் கோவில் பற்றி பொறுப்பற்ற முறையில் பேசினார். அவர் பேசியதாவது: தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்த வேளையில் . அங்குள்ள மக்கள் தஞ்சை கோவிலின் பெருமையை என்னிடம் கூறி அங்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு தஞ்சை கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார். ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில், நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவு தான் அறிவு. இவர்களிடம் சனாதன தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. தி.மு.க, தி.க., நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகளில் கைக்கூலிகளாக இருப்பவர்கள் ஆதாரமற்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக் கேடானது. கண்டிப்பாக ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவரின் பேச்சில் சமத்துவம் இல்லை. அவர் பேசும்போது கோவில்களுடன் தேவாலயம், மசூதியை உள்ளடக்கியிருக்க வேண்டும். ஜோதிகாவின் பேச்சை தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் பிற மதத்தை கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதே போல் நடிகை ஜோதிகாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தஞ்சாவூர் கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. கோவில்களில் பணம் போடாதீர்கள் என்று கூறுவது தவறானது. கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதேப்போன்று ஜோதிகாவின் குடும்பத்தார் நிறைய முறை பேசியிருக்கிறார்கள். இப்படி கூறுவது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















