பிரதமர் நரேந்தி மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று வானொலி மூலம் (மன் கி பாத்) மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் அன்றைய காலகட்டத்தில் உளள சூழ்நிலை முக்கிய மைய கருத்தாக இடம் பெற்று இருக்கும்.
இந்த மாதம் வரும் 28 ம் தேதி கடைசி ஞாயிற்று கிழமை வருகிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தான் உரையாற்ற வேண்டிய கருத்துகளுக்கான தலைப்பை கூற தயாராகும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டரில் : மான்கி பாத் நடைபெற இரண்டு வாரங்கள் உள்ளன. கோவிட் 19 மற்றும் அதனை எதிர்த்து போராடுவதற்கான தலைப்பை குறித்து நீங்கள் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். யோசனைகளையும் உள்ளீடுகளையும் தயாராக வைத்திருங்கள் அதிக அளவிலான கருத்துக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை காண இது எனக்கு உதவும் என பதிவிட்டு உள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014 அக்டோபர் 3ம் தேதி முதல் மான்கி பாத் நிகழ்ச்சியை துவக்கினார். கடந்த மாதம் 31 ம் தேதி வரையில் சுமார் 65 நிகழ்ச்சிகளை முடித்துள்ளார்.