இந்தியாவிற்கு வரும் ராட்சசன்! களத்திற்கு வருகிறது F-35.. மோடியின் அதிரடி சக்ஸஸ்.. கிரீன் சிக்னல் தந்த டிரம்ப்
அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது. இங்கிலாந்து, ஜப்பான், இஸ்ரேல், நெர்லாந்து, ஐரோப்பிய நாடுகள் போன்ற நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து இதுவரை ஒப்பந்தம் மூலம் இந்த விமானங்களை பெற்றது.இப்படிப்பட்ட நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தில், அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாகி அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி ஜாயின்ட் ஆண்ட்ரூஸ் தளத்தில் வந்திறங்கியபோது புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு வரவேற்பை அளித்தனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார் பிரதமர் மோடி. சுமார் 1 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. இன்று பிரதமர் மோடி அமெரிக்க NSA மைக்கேல் வால்ட்ஸ், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் DOGE தலைவர் எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். முன்னதாக நேற்று, பிரதமர் மோடி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கபார்டை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
F-35 விற்பனை:
இந்த பயணத்தில் மோடி – டிரம்ப் சந்திப்பிற்கு பின்பாக அமெரிக்கா இந்தியாவிடம் F-35 வகை விமானங்களை விற்க ஒப்புக்கொண்டு உள்ளது.F-35 என்பது அமெரிக்கா உருவாக்கிய ஒரு நவீன மற்றும் Stealth போர் விமானம் (Stealth Fighter Jet) ஆகும். இது ரேடார் கண்ணில் மண்ணை தூவி பயணிக்க கூடிய Stealth Technology திறனைக் கொண்டுள்ளது, அதாவது எதிரியின் ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. புதிய வகை எஃப்-35 இப்போது லாக்ஹீட் மார்ட்டின் எஃப்-35 லைட்னிங் II என்று அழைக்கப்படும்.
ஒற்றை இருக்கை, ஒற்றை எஞ்சின், சூப்பர்சோனிக் ஸ்டெல்த் ஸ்ட்ரைக் ஃபைட்டர்களைக் கொண்ட அமெரிக்க போர் விமான வகை ஆகும். டாக் பைட், தாக்குதல் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மல்டிரோல் போர் விமானம் ஆகும் இது.
முக்கிய அம்சங்கள்
3 விதமான பயிற்சி – நிலம், கடல், ஆகாயம் என மூன்று விதமான போர்களுக்கும் பயன்படுத்தலாம்.
மிகவும் வேகமானது – மணிக்கு 1900 கிமீ வரை பயணிக்கலாம்.
உயர்ந்த தொழில்நுட்பம் – தானாகவே டேட்டாவைப் பகிர்ந்து கொள்ளும் AI மற்றும் சென்சார்கள் கொண்டது.
ரேடார் பாதுகாப்பு – எதிரியின் ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத Stealth Technology கொண்டது.