கோவைக்கு வர வேண்டாம் ஸ்டாலின் திரும்பி போங்க ட்விட்டரில் அடிச்சு தூக்கும் கோ பேக் ஸ்டாலின்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இருந்தும், கோவை புறக்கணிக்கப்பட்டது. தடுப்பூசி போடுவதில் சுணக்கம் காட்டியது ஆளும் திமுக அரசு. இதனால் கோவையில் தினம் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. சென்னையை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தது கோவை மாவட்டம்.
பிரதமர் மோடி மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் வந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடுகிறது. இந்தியாவில் முதல் மாநிலமாக ஒருநாள் பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழகத்தில் இதுவரை சென்னையில்தான் அதிகபட்ச கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இப்போது அந்த இடத்தை கோவை மாநகர் பெற்றுள்ளது. அங்கு தினசரி பாதிப்பு, 4 ஆயிரத்தை கடந்துவிட்டது.
கோவை பகுதி மக்கள் ஏற்கனவே பெட் கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் அல்லல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வேகமாக பரவுவது கோவை மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, கோவை மாநகரை புறக்கணிக்கின்ற விதமாகத்தான், திமுக அரசு நடந்துகொள்கிறது. தடுப்பூசிகளை கோவை மண்டலத்திற்கு தமிழக அரசு முறையாக வழங்கவில்லை. கொரோனா தடுப்பூசி கேட்டு மக்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். அதிமுக கூட்டணி கோவை மாவட்டம் முழுவதும் வென்று காட்டியதால் ஆளும் திமுக அரசு கோவை மாவட்டத்தை புறக்கணிக்கிறது என அரசியல் நோக்கர்கள் மற்றும் சமூக வலைதளைங்களில் தீயாக பரவியது.
இந்த நிலையில் இன்று கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லும் நிலையில் ட்விட்டரில் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















