மீண்டும் உயர்வு தங்கம் விலை……….

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்றும் சவரனுக்கு 216 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டு இருந்து வரும் நிலையில், வரலாறு காணாத வகையில், ஒரு கிராம் 5 ஆயிரம் ரூபாயையும், ஒரு சவரன் 40 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்றும் அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று 5,037 ரூபாயாக இருந்த ஒரு கிராம் ஆபரணத்தங்கம், இன்று கிராமுக்கு 27 ரூபாய் அதிகரித்து 5,064 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் நேற்று 40,296 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று மேலும் 216 ரூபாய் உயர்ந்து 40,512 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே சமயம் பார்வெள்ளி ஒரு கிலோ இன்று 1,600 ரூபாய் குறைந்து 71,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version