மதரஸாக்கள் இழுத்து மூடப்படும் அரசு அதிரடி! மதரீதியாக இருக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்க முடியாது!

அசாமில் மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதரசாக்கள் மற்றும் சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் மையங்களை 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட திட்டமிட்டுள்ளது. ரத்த கட்டிடங்களில் பொது பள்ளிகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அசாம் மாநில கல்வியமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், மதசார்பற்ற அரசு மதம், வேதம், அரபி உள்ளிட்ட மொழிகளை கற்று கொடுப்பது தவறானது அது அரசின் வேலையும் இல்லை.

அசாம் மாநிலத்தில், மாநில அரசு கட்டுப்பாட்டில், சுமார் 1,200 மதரசாக்களும், 200 சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் பள்ளிகள் உள்ளன. இவை எந்தவிதமான வாரியத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுகின்றன.

மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி ,மேல்நிலை வகுப்புகளுக்கு இணையான சான்றிதழை வழங்குவதால் குழப்பம் ஏற்படுகிறது. இதனால், தான், மதரசாக்களையும், சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் மையங்களையும் வழக்கமான பள்ளிகளாக மாற்ற முடிவு செய்துள்ளோம்.

அசாம் மாநிலத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரம் தனியார் மதரசாக்களையும் முறைப்படுத்த வழிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. மாநில அரசு, மதச்சார்பற்ற அரசு என்பதால், மதரீதி கல்வி பயிற்றுவிக்கும் அமைப்புகளுக்கு நிதி வழங்க முடியாது. தனியார் மதரசாக்களும், சமஸ்கிருதம் பயிற்றுவிக்கும் நிறுவனங்களும் செயல்படலாம். ஆனால், அவை முறைப்படுத்த விதிமுறைகளை கொண்டு வருவோம்.

இந்த மையங்களுக்கு 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் படிக்கின்றனர். இந்த முடிவை பெற்றோர் தான் எடுக்கின்றனர்.

இதனால், வழக்கமான கல்வியை குழந்தைகள் இழந்துவிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

பயங்கரவாதம் புறப்படுகிறது என்ற தகவலை யொட்டி இந்த முடிவை அசாம் அரசு எடுத்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது

Exit mobile version