தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக கஞ்சா போதை புழக்கமும் தமிழகத்தில் அதிகரித்த வண்ணமே உள்ளன. ஒருபுறம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் போதை புழக்கம் குறைந்த பாடில்லை. இந்த நிலையில் திருத்தணியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் கஞ்சா போதையில் ரகளை செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
பள்ளி முடிந்து வரும் மாணவர்கள் கஞ்சா போதையில் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ரகளையில் ஈடுபடுவதாகவும், இதனை தட்டி கேட்ட பெண் பயணிகளை தரக்குறைவாக பேசுவதும், பேருந்து மீறி ஏறி ஆட்டம் போடுவதும் என அலப்பறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பியோடினர்.
இதுதொடர்பாக பெண் பயணிகள் கூறியதாவது : காலையில சாயந்திரம் எங்களால வீட்டுக்கு போக முடியல, ரொம்ப அட்டூழியம் பன்றாங்க, பஸ் மேல ஏறிக்கிறாங்க, என்று கூறினர்.
SOURCE MEEDIYAN
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















