கொரோனா அச்சுறுத்தல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவின் ஆரம்பம் சீனாவின் வுகான் நகரம். இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது இன்னும் மர்ம தேசமாகவே உள்ளது. சீனாவும் முன்னுக்கு பின்னாக பதிலளித்து வருகிறது. அமெரிக்காவே இந்த வைரஸ் சீனா ஆய்வகத்திலிருந்து பரவியது என கூறியுள்ளார்கள். இது ஒரு உயிரியல் போர் என பல அறிஞர்கள் தெரிவித்து வருகின்றார்கள் . உலகத்தின் பொருளாதாரத்தை சரிக்க வேண்டும் உலகின் வல்லரசாக உருவாக வேண்டும் என்றால் வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தை சரிக்க வேண்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் போர் என்பது சாத்தியப்படாதது.
அதனால் தான் இந்த உயிரியியல் போர் என்கிறார்கள் . இந்த கொரோனா போரில் உலகின் வல்லரசு நாடுகளான ஐரோப்பிய நாடுகள் முழுவதுமாக பொருளாதாரத்தில் சரிவை கண்டுள்ளது. இதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த சீனா தற்போது பல்வேறு நாடுகளில் தங்களின் முதலீடுகளை போடுகிறது. முக்கிய கம்பெனிகளில் முதலீடுகளை அதிகரித்து வருகிறது.
இதனால் உலக நாடுகள் சீன மீது இன்னும் கோபம் கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா முதலீடுகள் விஷயத்தில் சில மாற்றங்களை அதிரடியாக கொண்டு வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தற்போது உள்ள பங்குச்சந்தையில் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு அனைத்தும் வேகமாக சரிந்து வருகிறது.
இந்த நிலமையை பயன்படுத்தி சீன நிறுவனங்கள் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனகுறிப்பாக சீனாவின் மத்திய வங்கி கடந்த மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் 1.01 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை இந்திய பெரு நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனாவை பயன்படுத்தி இந்திய நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சிப்பதாகவும் அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது இதனை தொடர்ந்து மத்திய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டது இந்திய நிறுவனங்களின் பங்குகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவேண்டும் என்றால் மத்திய அரசிடம் அனுமதி கேட்கவேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவை குறிவைத்து அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறையின் படி இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ள நாடுகள் இந்திய நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.
அந்நிய முதலீட்டு நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திருத்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக சீனா இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்து பங்குகளை வாங்கி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைத்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















