கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் . உலகச் சாம்பியனுடன் விளையாடப் போகும் வீரரை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட் செஸ் போட்டி, கனடாவின் டொரன்டோ நகரில் நடைபெறது. 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில், இந்தியாவின் இருந்து பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி உள்ளிட்ட உலகின் எட்டு முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இதில், சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் நகமுராவை குகேஷ் எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்தார். மற்றொரு கடைசி சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருணா, ரஷ்யாவின் இயான் நெப்போம்னியாச்சியை எதிர்த்து விளையாடினார். இன்று 14வது நடைப்பெற்ற நிலையில், முன்னணியில் இருந்த குகேஷ், போட்டியை டிரா செய்தாலே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.
இந்த போட்டி டிராவில் முடிந்த நிலையில், புள்ளிகள் அடிப்படையில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன்மூலம் கேண்டிடேட் செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இறுதிச் சுற்றில் வென்றதால் குகேஷ் நடப்பு உலக சாம்பியனான சீனாவை சேர்ந்த டிங் லிரெனுடன் பட்டத்திற்காக விரைவில் மோதவுள்ளார்.

கேண்டிடேடஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, சாம்பியன் பட்டம் வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையை குகேஷ் நிகழ்த்தியிருக்கிறார்.17 வயதாகும் குகேஷ் உலக சாம்பியனுடன் மோத உள்ளதால் , பல தரப்பினரும் குகேஷுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 17 வயதான குகேஷ், கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















