தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தற்போது தமிழகம் முழுவதும் ‛என் மண்; என் மக்கள்’
பாதயாத்திரை மூலம் தமிழக மக்களை சந்தித்து வருகிறார். அண்ணாமலை செல்லும் இடமெல்லாம் மக்களின் வரவேற்பு அதிகமாக உள்ளது. மக்களின் வரவேற்பு பா.ஜ.கவிற்கு ஒரு புது உத்வேகத்தை அளித்துள்ளது.
2024 ல் வரவிற்கும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் புதிய மாற்றம் வரவேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.கவை தமிழகத்தில் வலிமைப்படுத்தவும் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைப்பயணம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் இந்த நடைப்பயணம் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தூத்துக்குடியை அடைந்துள்ளது. மேலும் அண்ணாமலை தூத்துக்குடி மில்லர்புரத்தில் அமைந்துள்ள பொன் மாரியப்பன் என்பவரின் சலூன் கடைக்கு சென்றார்.
யார் இந்த பொன் மாரியப்பன் தூத்துக்குடி மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கும் பொன் மாரியப்பன் தனது கடையில் மினி நூலகம் வைத்துள்ளார்.தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும்போது புத்தகங்களை படிக்கும் வகையில் இந்த நூலகத்தை அவர் அமைத்துள்ளார். இதனால் அவரது சலூன் கடை மிகவும் பிரபலமானதாக உள்ளது. பிரதமர் மோடியும் ‛மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பொன் மாரியப்பன் சலூன் கடையை பாராட்டி இருந்தார். ஆளுநர் ஆர்என் ரவியும் அவரை பாராட்டியிருந்தார்
இந்த நிலையில் அண்ணாமலை அவரின் கடைக்கு சென்றபோது அங்கு பழைய சேர்கள் தான் இருந்தது ஏன் இருக்கைகளை மாற்றவில்லை என கடைக்காரரிடம் அண்ணாமலை கேட்டார். அதற்கு பொன் மாரியப்பன் கடையில் வரும் வருமானம் வீட்டு செலவுக்கும் புத்தகங்கள் வாங்கும் செலவுக்குமே சரியாகிவிடுகிறது என கூறினார் .
உடனே அண்ணாமலை அண்ணா இந்தங்கா 20,000 புது சேர் வங்கிக்காங்கோ.. இந்த மினி நூலகத்திற்கு நான் ஒரு 100 புத்தகங்கள் வாங்கித்தரேன் என கூறியது கடைக்காரரை மட்டுமல்ல அங்கு கூடி இருந்தவர்களையும் நெகிழ வைத்தது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கமான எஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.