கடந்தாண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் புல்வாமாவில் செயல்படும் துணை ராணுவப் படை முகாமில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பின் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இதில், 40 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல், நாடு முழுவதும் மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய பயங்கரவாதியான, காஷ்மீரைச் சேர்ந்த, ஜாகிர் பஷீர், 26, என்பவனை, தேசிய புலனாய்வு அமைப்பினர், கைது செய்துள்ளனர். இவன் தற்கொலை பட தாக்குதலில் மனித வெடி குண்டாக செயல்பட்ட தீவிரவாதி அடில் அகமது தாருக்கு, பல ஆண்டுகளாக தங்குவதற்கு இடம் அளித்ததுடன், பல்வேறு ஆயுதங்கள் வாங்கி தருவது வெடி பொருட்கள் வாங்கி தருவது என அனைத்து உதவிகளையும்செய்துள்ளான். இதை ஜாகிர் பஷீர்,ஒப்பு கொண்டுள்ளான்.
இந்தியாவில் வாழ்ந்து கொண்டு நம்மை காப்பாற்றும் ராணுவ வீரர்களை கொல்ல உதவி செய்த ஜாகிர் பஷீர்,எப்படி மனம் வந்ததோ