தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலூகா ஸ்ரீ மூலக்கரை பஞ்சாயத்தில் பேட்மாநகரம் சுமார் ஆயிரம் குடும்பங்கள் இஸ்லாமியர்கள் வசிக்கின்றார்கள்.
பேட்மாநகரம் அருகிலுள்ள முத்துசாமிபுரம் அருகில் சுமார் மூன்று சமுதாயத்தைச் சேர்ந்த இந்துக்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர்.அங்கு வாழ்கின்ற இந்துக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.
ஏற்கனவே 15 ஆண்டுக்கு முன்னால் கோவில் கொடை விழாவில் கிரிக்கெட் விளையாடும் போது இஸ்லாமிய இளைஞர்களுக்கும் இந்து இளைஞர்களுக்கும் அடிதடி ஆகி கிரிமினல் வழக்கு பதிவாக பதிவானது. மேலும் அங்கு முருகன் என்ற ஒரு நபர் கொல்லு பட்டறை நடத்திவந்தார் அவர் இந்து என்ற காரணத்தால் அவர் மீது இஸ்லாமியர்கள் பொய்யான புகார்கள் கொடுத்து அவரை அடித்து அந்த ஊரை விட்டு காலி செய்ய வைத்தனர்.
பஜாரில் இந்துக்கள் யாரும் கடை வைக்க கூடாது என்று ஜமாத்தில் மறைமுகமாக முடிவு செய்யப்பட்டு இந்துக்கள் யாரும் கடை வைக்க இஸ்லாமியர்கள் அனுமதிக்கவில்லை.
பேட்மா மாநகரில் கணேசன் நடத்தி வந்த கடையில் விநாயகர் படம் இருந்த காரணத்தால் இஸ்லாமிய இளைஞர்கள் விநாயகர் படத்தை அடித்து நொறுக்கி கடையும் மூடப்பட்டது.
இதுபோக அவர்கள் குடியிருக்கும் இடம் 142 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தை முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜமாத் உதவியுடன் ஆக்கிரமித்து விற்பனை செய்து அந்த பணம் ஜமாத்திற்கு வழங்கப்படுகிறது.
அந்தப்பகுதியில் வாழுகின்ற இந்துக்களுக்கு இடம் கொடுக்க மறுக்கின்றனர்.
அரசு அதிகாரிகளும் இந்துக்களிடம் பாரபட்சமாக செயல்படுகின்றனர்.
அங்கு செயல்படும் நியாயவிலை சட்டத்திற்கு புறம்பாக கடை வெள்ளிக்கிழமை மூடப்படுகின்றது. பக்கத்தில் கிராமத்தில் இந்துக்கள் அங்குதான் ரேஷன் வாங்க செல்ல வேண்டும்.
அந்த ஊர் மக்கள் சார்பாக சட்ட கல்லூரி மாணவர் முத்துராமலிங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் வட்டாட்சியர் அவர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கும் இந்த இடம் சம்பந்தமாக பல புகார்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் செவிசாய்க்காமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்துமுன்னணி நெல்லை கோட்ட செயலாளர் பெ.சத்திவேலன் 3.11.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கோட்டாட்சியர் வட்டாட்சியருக்கு அளித்த மனுக்கள் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் நீங்கள் இந்த ஊரில் சிறுபான்மையினராக தான் இருக்கின்றீர்கள் உங்களை காலி செய்ய ஒரு மணிநேரம் கூட ஆகாது என்று இஸ்லாமியர்கள் மிரட்டல் விடுக்கின்றனர் என்று அந்த பகுதி இந்துக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்துக்கள் வாழுகின்ற பகுதி முத்துசாமி புரம் வாட்டர் டேங்க்கில் உள்ள தண்ணீரை இஸ்லாமியர் பகுதிகளுக்கு முழுமையாக வழங்குகின்றனர் இந்துக்களுக்கு குறைவான தண்ணீர் வழங்கப்படுவதாக இந்துக்கள்க புகார் தெரிவிக்கின்றனர்.
பேட்மா மாநகரில் அரசு விளையாட்டு மைதானத்தில் இந்து இளைஞர்களை விளையாடுவதை இஸ்லாமியர்கள் அனுமதிப்பதில்லை. இதுபோன்ற பல இடையூறுகள் அப்பகுதியில் வாழும் இந்துக்களுக்கு தொடர்ந்து இஸ்லாமியர்கள் மூலம் ஏற்படுகிறது.
அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறையினர் இது சம்பந்தமாக புகார் கொடுத்தால் கண்டும் காணாமல் இருக்கின்றனர். அல்லது இஸ்மியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
சமீபத்தில் முத்துசாமிபுரம் விளையாட்டு மைதானத்தில் இந்து இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடினார்கள் இதை ஜமாத் மூலமாக காவல்துறையில் புகார் மனு கொடுத்து இந்த இளைஞர்களை விளையாடக்கூடாது என்று திருவைகுண்டம் காவல்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆகவே அந்த பகுதி இந்துக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டுரை :- வி.பி.ஜெயக்குமார்
இந்து முன்னணி
மாநில துணைத் தலைவர்