உலகிலேயே ஹிந்து மக்களுக்கான ஒரே நாடு என்றால் அது நேபாளம் மட்டுமே. ஆனால் அங்கு மன்னராட்சி முடிவுக்கு வந்த பிறகு மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகு தனிமனித சுதந்திரம் ஒடுக்கப்பட்டது. சீனாவின் அடிமை போல செயல்படத் துவங்கியது நேபாள கம்யூனிஸ்ட் அரசு. பிரதமரை விட நேபாளத்தில் உள்ள சீனாவில் தூதர் அதிக பலம் பொருந்தியவராக மாறிவிட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நேபாள எல்லைக்குள் சீனா மெல்ல மெல்ல மூக்கை நுழைக்க துவங்கியது.
நேபாள எல்லைக்கு உள்ளே நுழைந்த சீனா, ஹீம்லா மாவட்டத்தில் பல இடங்களில் மிக பெரிய கட்டிடங்களையும் கட்டியது.கம்யூனிஸ்டுகள் ஆட்சி தொடருமானால் நேபாளம் முழுவதுமே சீனாவின் கைப்பிடிக்குள் போய்விடும் என்பதே மக்கள் உணரத் துவங்கினர்.
இதுநாள்வரை அடங்கிப்போன நேபாள மக்கள் பொறுத்தது போதும் என்று நினைத்தனர், கொதித்தெழுந்தனர். மீண்டும் நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று மிகப்பெரிய புரட்சி வெடித்துள்ளது.
நேபாளத்தில் இதுவரை காணாத அளவு மிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மீண்டும் மன்னராட்சி வேண்டும் மீண்டும் இந்து ராஷ்டிரம் ஆக அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோஷத்தோடுஅளவுக்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பல லட்சம் நேபாளியர்கள், கம்யூனிஸ்டுகளை எதிர்த்து மன்னராட்சி வேண்டும் என்ற கோஷத்துடன், அதிரடியாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.உலகின் ஒரே இந்து நாடாக செயல்பட்டு வந்த நேபாளம் கம்யூனிஸ்டுகள் இடையில் ஆட்சி வந்த பிறகு தனது தனித்தன்மையை இழந்து விட்டது.
தொடர்ந்தால் சீனாவின் ஒரு பகுதியாகவே மாறிவிடும் அபாயத்தில் நேபாளம் உள்ளது. எனவே, நேபாளி மக்களின் இந்த எழுச்சி போராட்டத்திற்கு பாரததேசம் உதவ வேண்டும் இங்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெனரல் பக்ஸி (Bakshi) கோரிக்கை விடுத்துள்ளார்.- பத்மநாபன் நாகராஜன்