களியக்காவிளை பகுதியில் சட்டவிரோத ஜெபக்கூடத்தை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு, பூதப்பிலாவினை பகுதியில் கேரளாவை சேர்ந்த கலேஷ் என்பவர் சில மாதங்களுக்கு முன்னர் வீடு வாங்கி குடியேறினார். அங்கு அனுமதி பெறாமல் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தை கட்டி ஒலிப்பெருக்கி மூலமாக பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார். இதனால் இடையூறு ஏற்படுவதாக கூறி அருகாமையில் உள்ள வீட்டு உரிமையாளர் ராஜேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஜெபக்கூடத்தை தடை செய்தனர்.
இருந்தபோதிலும் சட்டத்தை மீறி கலேஷ் மீண்டும் ஜெபக்கூடத்தை நடத்தி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை கலேஷ் வீட்டில் ஜெபக்கூடம் நடத்தி தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் ராஜேஷ் வீட்டில் பிரார்த்தனை கூடம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவத்தால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தக்கலை டிஎஸ்பி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை தொடர்ந்து போலீசார் புறப்பட்டு சென்றனர்.
Source kathir news