எம்.பி., ஆ.ராஜா பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்து மதத்திற்கு எதிராகவே தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், ஹிந்து மத பண்டிகைகள் தவிர, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். தி.மு.க., தலைவர்கள், ஹிந்து மதத்தை மட்டும் கிண்டலடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்கு உச்சமாக, ‘கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல், சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’ என, அமைச்சர் உதயநிதி பேசினார். இது, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு தி.மு.க., இடம் பெற்றுள்ள, ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், தி.மு.க., கவலைப்படவில்லை. தி.மு.க., – எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராஜா, தொடர்ந்து ஹிந்து மதத்திற்கு எதிராக பேசிவருகிறார்.
சமீபத்தில், அவர் தொலைக்காட்சி விவாதத்தில், ஹிந்து மதத்திற்கு எதிராக பேசியது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது:ஜாதி என்ற சர்வதேச நோய்க்கு, இந்தியாவே காரணம். ஜாதி அடிப்படையில் மக்களை இந்தியா பிளவுபடுத்துகிறது. ஜாதியை பயன்படுத்தி, பொருளாதார ரீதியாகவும், இந்தியா மக்களை பிளவு
படுத்துகிறது.
சமூக சீர்கேட்டிற்கு மட்டும் ஜாதி பயன்படுத்தப்படுவதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் ஜாதியால் கட்டமைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், ஹிந்துயிசம் என்ற பெயரால், ஜாதியை பரப்புகின்றனர். ஹிந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.அவர் பேசிய வீடியோ பதிவை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன், ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டு, கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், சமூக வலைதளங்களில் ஆ.ராஜா பேச்சுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















