தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, தனியார் தொலைக்காட்சி நடத்திய பட்டிமன்றத்தில் நடுவராக பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, ஆங்கிலேய கிறிஸ்துவர்கள் வந்து தான் கல்வி கொடுத்தனர். என்ற பேச்சு சர்சைக்குள்ளானது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இது குறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரிட்டன் கிறிஸ்துவ ஆட்சி தான் பாரதத்தின் கல்வியை, மருத்துவத்தை, தொன்மையை, விவசாயத்தை, காடுகளை என, எல்லாவற்றையும் அழித்தது என்பதை, பலரும் உணரவில்லை.
சாலமன் பாப்பையா போன்றவர்கள் தங்கள் அறியாமையை, பொது தளத்தில் வெளிப்படுத்துவதற்கு முன், தங்களை இந்த உலகம் எப்படி எடைபோடும் என்பதை உணர்ந்து பேச வேண்டும்.இது போன்ற தவறான கருத்துகளை பேசுவது, அறிவார்ந்த செயல் இல்லை. பாரதி மொழியில் சொல்வதானால், ‘படித்தவன் பொய் சொன்னால், போவான், போவான் ஐயோ என்று போவான்’ எனும் அறச்சீற்றத்தை உள்வாங்கி கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவ விசுவாசத்தால், உண்மைக்கு புறம்பான கருத்தை பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு ஹிந்து முன்னணி கண்டனத்தை தெரிவிக்கிறது.