ஆதினங்களே… மடாதிபதிகளே…. பீடாதிபதிகளே… அமைதி காத்தது போதும்….. புறப்படுங்கள்.
……………………………………………………………………………………..
இஸ்லாம், கிறிஸ்தவம் மதங்களை யாராவது விமர்சித்தால் உடனடியாக முல்லாக்கள், மௌல்விகள், பிஷப்புகள், பாதிரிகள் வரை சாலைக்கு வந்துவிடுகிறார்கள்.
ஆனால்
இந்து மதங்கள், இந்துக்கள் தாக்கப்படும்போது பல இந்து மடங்கள், ஆதினங்கள், பீடங்கள் என்று எவையுமே கவலைப்படுவதில்லை. ஆன்மிகத்தின் முக்கியக் குறியீடாக விளங்குகின்ற முருகப்பெருமானையும் அடியார்களையும் ஒருவன் கேவலமாக விமர்சிக்கிறான் என்றால் இவர்களே முதலில் கண்டனக் குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியொரு குரல் எழுந்திருக்கிறா என்று தெரியவில்லை.
இந்துக்கள் இருக்கும்வரைதான் மடங்களும், ஆதினங்களும், பீடங்களும் உயிர்ப்போடு இருக்க முடியும். இல்லையென்றால் காஷ்மீரில் காணாமல் போன சாரதா பீடம் போல இங்கேயும் மடங்களும், ஆதினங்களும் பீடங்களும் காணாமல் போகும்.
இல்லை…. எங்களுடைய பணி மந்திரங்களை சொல்லிக் கொண்டிருப்பது, சொல்லிக் கொடுப்பது, முக்திக்கு வழிகாட்டுவது என்று தத்துவம் பேசினால்…. அந்த தத்துவத்தை கேட்பதற்குகூட பிறகு இந்துக்கள் இருக்கமாட்டார்கள். அவ்வளவு ஏன்…. அந்த தத்துவங்களை சொல்ல நீங்கள் யாருமே இருக்க மாட்டீர்கள்.
காஷ்யப்புரம் என்கிற காஷ்மீர் சரித்திரம் கற்றுத் தரும் பாடம் இதுதான்.
ஆன்மிக இந்துக்களை உணர்வுள்ள இந்துக்களாக எழுச்சிபெற வைக்க மடங்கள், ஆதினங்கள், பீடங்கள் இவைகளால்தான் முடியும்.
அதனால் ஆதினங்களே… மடாதிபதிகளே…. பீடாதிபதிகளே… அமைதி காத்தது போதும்….. புறப்படுங்கள்.
மா.வெங்கடேசன் தமிழக பாஜகவின் முன்னாள் எஸ்.சி அணிதலைவர்.