Thursday, March 12, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்று தான் : தமிழக அரசின் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ளது…உதயண்ணா படிக்கவில்லையா?

Oredesam by Oredesam
September 13, 2023
in அரசியல், செய்திகள்
0
இந்து மதமும் சனாதன தர்மமும் ஒன்று தான் : தமிழக அரசின் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ளது…உதயண்ணா படிக்கவில்லையா?
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி சனாதனத்தை டெங்கு,மலேரியா, கொரோனாவோடு ஒப்பிட்டு பேசி அவற்றை ஒழிப்பதுபோல்சனாதனத்தையும் ஒழிக்கவேண்டும் என்று பேசினார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையாகவே ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் அமைச்சர் உதயநிதி தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறி தற்போது நான் சனாதனத்தை தான் ஒழிப்பேன் என்று சொன்னேன் ஹிந்து மதத்தை அல்ல என்று பேசியிருக்கிறார்.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

ஆரம்பம் முதலே ஹிந்து மதமும் சனாதனமும் ஒன்று என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு சான்று தருவகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவியலும் இந்திய பண்பாடும் என்று புத்தகத்தில் இந்து மதம் குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய சமயங்கள்:
இந்தியாவில் இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் போன்ற சமயங்கள் தோன்றின. மேலும் இஸ்லாம், கிறித்துவம், ஜொராஸ்டிரியம் போன்ற சமயங்கள் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இந்தியா, பல சமயங்களின் தாயகமாகும். இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.

இந்து சமயம்:

இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும். இஃது, உலகச் சமயங்களுள் தொன்மையான சமயமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றனர். பிற சமயங்களைப்போல் அல்லாது, இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று எவருமில்லை. பல்வேறு வகையான நம்பிக்கைகள், சடங்குகள், சமயநூல்கள் என்பனவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே, இந்து சமயமாகும்.

இந்து என்னும் சொல்லின் தோற்றம்:

கிரேக்கர், அராபியர், பாரசீகர் போன்ற அயல்நாட்டினர், பாரத நாட்டைச் சிந்து ஆற்றின் பெயரால் (ஸிந்து) ஹிந்து என்று அழைத்தனர். அது நாளடைவில் ஹிந்து என்று மாறியது. இது தமிழில் இந்து என்று வழங்கப்படுகிறது. இப்பெயர் இந்திய துணைக்கண்டமாகிய நிலப்பரப்பு மட்டுமின்றி, இங்கு வாழ்கின்ற மக்கள், பண்பாடு போன்றவற்றிற்கும் இவர்களது சமயத்திற்கும் பெயராகி உள்ளது.

இந்து என்னும் சொல்லின் பொருள்:

இந்து அல்லது ‘ஹிந்து’ என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்&ஹிம்சையில், து&துக்கிப்பவன் எனப் பொருள்படும். ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தைத் தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.

இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது.

மனிதனின் கலை உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கப்படுகிறது. அவனது ஆன்மிகப் பயணத்திற்கு உந்துதலாக அமைகிறது. மனிதர்களது அறிவுப் பசிக்குத் தத்துவக் கோட்பாடுகள் மூலம் உணவளிப்பது சமயமே ஆகும்

இந்து சமயத்தின் அடிப்படை:

இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடு கடவுளை அடைவதாகும். எல்லாவற்றையும்விட இவர் மேலானவராக இருப்பதால், கடவுளைப் பரம்பொருள் என்று இந்து சமயம் கூறுகிறது. கடவுள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்கிறார். படைக்கும்போது அவர் பிரம்மன் என்றும், அழிக்கும்போது சிவன் என்றும் அறியப்படுகிறார். இந்த வெவ்வேறு மூன்று தொழில்களைச் செய்யும் பரம்பொருளையே மும்மூர்த்திகள் என்று கூறுகின்றனர். ஆன்மா, வினைப்பயன், மறுபிறப்பு, வீடுபேறு போன்றவை இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்கள் ஆகும்.

ஆன்மா (உயிர்)
ஆன்மா உடலுடன் வாழும்போது ஜீவாத்மா என்றழைக்கப்படுகிறது. அஃது அழிவில்லாதது. உடலுக்கு அழிவு உண்டு; ஆன்மாவிற்கு அழிவில்லை என்று இந்து சமயம் கூறுகிறது.

சனாதனம் வேறு இந்து மதம் வேறு என்று கம்பு சுற்றுபவர்கள், விடியல அரசின் 12 வது பாடப்புத்தகத்தை யாது படித்திருக்க வேண்டும்… உதயநிதி எப்படி பாஸ் செய்து இருப்பார் என்று நமக்கு தெரியாதா என்று கலாய்கின்றனர் நெட்டிசன்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Karasevakars Arrested

அயோத்யாவில் ராமர் கோவில் திறப்பு விழா நெருங்கும் நேரத்தில்…காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் கரசேவகர்கள் கைது…

January 3, 2024
Kallakurichi

ஆற்று திருவிழாவை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றில் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்த பா.ஜ.க வினர்.

January 18, 2024
மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

August 11, 2021
கடந்த திமுக ஆட்சியில் 5  புதிய மது ஆலைகளுக்கு அனுமதி!  11 மது ஆலைகளில் 7 திமுக ஆதரவாளர்களுடையது – உண்மையை உடைத்த மருத்துவர் ராமதாஸ்!

கடந்த திமுக ஆட்சியில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி! 11 மது ஆலைகளில் 7 திமுக ஆதரவாளர்களுடையது – உண்மையை உடைத்த மருத்துவர் ராமதாஸ்!

June 21, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x