சீனாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு ஏற்படுத்திய இந்துக்கள்! விழாக்களில் சீன பொருட்கள் புறக்கணிப்பு!
இந்துக்கள் பண்டிகை இந்தியாவின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு போன்றது. வருடம் தோறும் இந்தியாவில் எதாவது ஒரு இடத்தில் திருவிழா நடைபெற்றுவரும். குழந்தை பிறந்தது முதல் அவர் வளர்ந்து கல்யாணம் முடித்து பேரன் பிள்ளைகள் எடுக்கும் வரை இந்து மதத்தில் சடங்குகள் சம்பர்தாயங்கள் உண்டு. இது வெறும் சம்பர்தாயங்கள் மட்டுமல்ல பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் இந்து மத மக்களின் சடங்கு சம்பிரதாயங்கள் நம்பி இருக்கிறது.
குழந்தை பிறந்தவுடன் தாய்மான் சீர் முதல் இறந்த பின் காரியம் செய்யும் வரை அனைத்திலும் தெருவோரத்தில் கடை வைத்துள்ள பூ கடை முதல் பெரிய தங்க நகை கடை வரை வியபாரம் நடைபெறும். இது மறுக்க முடியாத ஒன்று ஆகும். இந்தியாவின் பொருளாதாரத்தில் மற்றும் பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றி வரும் இந்துமத பண்டிகைகள் திருவிழாக்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் என கூறி இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்க பல கும்பல்கள் இந்தியாவில் இருக்கிறது.
வரும் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடபட உள்ளது இந்த நிலையில் அனைத்து இடங்களிலும் தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது. தெருவோர கடைகள் முதல் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் மக்கள் புது துணி வாங்கவும் பட்டாசுகள் வாங்கவும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் ஆபத்தான சீன பட்டாசுகளையும், அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற மலிவு விலை பொருட்களையும் இந்துமக்கள் நிராகரித்து வருகின்றனர்,.இது உள்நாட்டில் பட்டாசு, பண்டிகை கால பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு லாபகரமாக உள்ளது.
ஆண்டுதோறும் ராக்கி விழா முதல் புத்தாண்டு வரையிலான ஐந்து மாத பண்டிகை காலத்தில் சீனாவில் இருந்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் சீன பொருட்களை மக்கள் நிராகரித்து வருவதால் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீன பொருட்களை நிராகரிக்கும்படி, வர்த்தகர்களிடம் வலியுறுத்தியது.இதன் காரணமாக இந்தாண்டு பண்டிகை காலத்தில் சென்னை, மும்பை உள்ளிட்ட 20 நகரங்களைச் சேர்ந்த வர்த்தகர்கள், சீனப் பொருட்களை இறக்குமதி செய்யவில்லை. கடந்தாண்டு இதனால் சீன ஏற்றுமதியாளர்களுக்கு ராக்கி விழாவில், 5,000 கோடி ரூபாய் விநாயகர் சதுர்த்திக்கு, 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வகையில் இந்தாண்டு இந்து மத பண்டிகைகள் சீன ஏற்றுமதியாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் மட்டுமின்றி நுகர்வோரும் சீனப் பொருட்களை நிராகரிப்பது, உள்நாட்டு தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கமளித்துள்ளது.